புகைப்பிடிக்காதவர்களையும் தாக்கும் தலை, கழுத்து புற்றுநோய்: அதிர்ச்சித் தகவல்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27 அன்று அனுசரிக்கப்படும் உலக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினம், இந்த வகையான புற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச தலை மற்றும் கழுத்து புற்றுநோய் சங்கங்களின் கூட்டமைப்பால் நிறுவப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27 அன்று அனுசரிக்கப்படும் உலக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினம், இந்த வகையான புற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச தலை மற்றும் கழுத்து புற்றுநோய் சங்கங்களின் கூட்டமைப்பால் நிறுவப்பட்டது.

author-image
WebDesk
New Update
Oncologist

தலை, கழுத்து புற்றுநோய்: புகைப்பிடிக்காதவர்களுக்கும் ஆபத்து - அதிர்ச்சித் தகவல்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27 அன்று அனுசரிக்கப்படும் உலக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினம், இந்த வகையான புற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச தலை மற்றும் கழுத்து புற்றுநோய் சங்கங்களின் கூட்டமைப்பால் (International Federation of Head and Neck Oncology Societies) நிறுவப்பட்டது. புகையிலை பயன்பாடு மட்டுமே முதன்மைக் காரணமாகக் கருதப்பட்ட நிலையில், இப்போது புகைப்பிடிக்காதவர்களையும் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்கள் அதிகரித்து வருவது, HPV, மோசமான வாய் சுகாதாரம், காற்று மாசுபாடு போன்ற புதிய ஆபத்து காரணிகளை முன்னிலைப்படுத்துகிறது.

Advertisment

"தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு நீண்ட காலமாக மது மற்றும் புகையிலைப் பழக்கமே முக்கிய காரணமாகக் கருதப்பட்டது. ஆனால், கடந்தசில ஆண்டுகளாக, நோய் கண்டறியப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் தனித்துவமான மாற்றம் காணப்படுகிறது. புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களும் இந்த வகை புற்றுநோய்களுடன் வருகின்றனர். இந்த போக்கு, வழக்கமான காரணங்களைத் தாண்டி புதிய காரணிகள் செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறது" என்கிறார் எச்.சி.ஜி. ஐ.சி.எஸ். குப் சந்தானி புற்றுநோய் மையத்தின் (HCG ICS Khubchandani Cancer Centre) தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் பிரசாந்த் பவார். இந்த மாற்றத்திற்கான ஆச்சரியமான காரணங்களையும், எவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் டாக்டர் பிரசாந்த் HT லைஃப்ஸ்டைல் உடனான தனது உரையாடலில் பகிர்ந்துள்ளார்.

மனித பாப்பிலோமா வைரஸ் (HPV-16) வாய் புற்றுநோய்கள், தொண்டையின் அடிப்பகுதி, டான்சில்கள் ஆகியவற்றில் ஏற்படும் ஓரோஃபாரிங்ஸ் புற்றுநோயுடன் (oropharynx cancer) தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இது இளைஞர்கள் மற்றும் புகைப்பிடிக்காதவர்களிடையே மிகவும் பொதுவானது. HPV-பாசிட்டிவ் தலை மற்றும் கழுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இளையவர்கள், ஆரோக்கியமானவர்கள், நகர்ப்புற பின்னணி கொண்டவர்கள், மற்றும் சுகாதார வசதி மற்றும் விழிப்புணர்வு உள்ளவர்கள். இவர்களுக்கான சிகிச்சை முறைகள் மற்றும் நோயின் இயல்பு புகையிலையால் தூண்டப்பட்ட புற்றுநோய்களிலிருந்து வேறுபடுகின்றன.

புதிய ஆபத்து காரணிகளாக, நீண்ட கால காற்று மாசுபாடு, தொழில்துறை ரசாயனங்கள் மற்றும் அசுத்தமான வாய் ஆரோக்கியம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இவை குறிப்பாக நகர்ப்புற மற்றும் பகுதி நகர்ப்புறப் பகுதிகளில் காணப்படுகின்றன. மோசமான உணவுப் பழக்கம், நாள்பட்ட அமில வீக்கம் (GERD-Gastroesophageal Reflux Disease) மற்றும் பலவீனமான நோய்எதிர்ப்பு சக்தி ஆகியவை புகைப்பிடிக்காதவர்களுக்கும் ஆபத்தை அதிகரிக்கலாம்.

Advertisment
Advertisements

தலை மற்றும் கழுத்து புற்றுநோய்கள் பெரும்பாலும் புகைப் பழக்கத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுவதால், புகைப்பிடிக்காத நோயாளிகள் ஆரம்ப அறிகுறிகளான அடிக்கடி தொண்டை வலி, குரல் கரகரப்பு, அல்லது கழுத்துப் பகுதியில் ஒரு கட்டி போன்றவற்றை புறக்கணிக்கின்றனர். இதனால் நோயறிதலில் தாமதம் ஏற்படுகிறது. பதின்ம வயதினருக்கு HPV தடுப்பூசி போடுவது, எதிர்காலத்தில் தலை, கழுத்து புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்பை கணிசமாகக் குறைப்பதற்கான முக்கிய வழியாகும். HPV பாசிட்டிவ் புற்றுநோய்களை சிகிச்சையளிப்பது எளிதானது மற்றும் சிறந்த விளைவுகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், சிறந்த சிகிச்சை முடிவுகளுக்கு சரியான நோயறிதல் மற்றும் புற்றுநோயின் கட்டத்தை (staging) தீர்மானிப்பது இன்னும் பொருத்தமானதாக உள்ளது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: