Advertisment

உலக இதய தினம்: மாரடைப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

மார்பின் நடுவில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் தாங்க முடியாத வலி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உலக இதய தினம்

உலக இதய தினம்

உலக இதய தினம் ஆண்டுதோறும் ‘உலக இதய கூட்டமைப்பால்’ (World Health Federation) அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1999 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பிறகு, செப்டம்பர் 29ஆம் தேதியாக மாறியது.

Advertisment

உலகில் அதிகப்படியான மரணம் மாரடைப்பால் தான் நிகழ்வதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்திருந்தது. இப்படி அதிகப்படியான மரணத்தை அளிக்கும் மாரடைப்பில் இருந்து நமது உடலையும் உயிரையும் காப்பது நமது தலையாய கடமை அள்ளவா?

இந்த ஆண்டு உலக இதய தினத்தின் கருப் பொருள் “இதயத்தை கவனி, வாழ்க்கையை அனுபவி” என்பதாகும் இதய நோய்கள் பல இருந்தாலும் மாரடைப்புதான் முக்கியமான நோயாக பார்க்கப்படுகிறது. கடந்த 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு வயதானவர்களுக்கு வந்து கொண்டிருந்த மாரடைப்பு, தற்போது இளைஞர்களுக்கு அதிக அளவில் வருவது ஏற்றுக் கொள்ள முடியாத உண்மையாக இருக்கிறது.

2030-ஆம் ஆண்டுக்குள் 2.3 கோடி மக்கள் இதயக் குழல் நோயால் மரணம் அடையக்கூடும் (உலகளவில் இந்த நோயினால் 31% பேர் மரணம்) எனக் கணிக்கப்பட்டுள்ளது. இப்படி மாறி மாறி அச்சத்தை தந்துக் கொண்டிருக்கும் மாராடைப்பில் இருப்பது உங்களையும், உங்களின் குடும்பத்தாரையும் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

மாரடைப்பின் அறிகுறிகள்:

பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் 30 வயதுக்கு மேல் உள்ளோர் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறையும், இதயம் சார்ந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

1. மார்பின் நடுவில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் தாங்க முடியாத வலி

2. மூச்சடைப்பு, குளிர் வியர்வை, குமட்டல், தலைசுற்

3. பொதுவாக நெஞ்சில் வலி ஏற்படும் போது மூச்சு வாங்கினால் அது மாரடைப்பு அல்ல பேனிக் அட்டாக்காகத் தான் இருக்கும். மார்பில் வலி ஏற்பட்டதுமே அந்த பதட்டமடைவது தான் காரணம்.

தடுக்கும் வழிமுறைகள்:

1. தினமும் உடற்பயிற்சி ஒரு மணி நேரம் செய்வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்றுயாகும்/

2. பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்தை பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை பாதுகாக்கும். உணவில் அதிகம் கவனம் தேவை.

3. மனஅழுத்தம் ஏற்படும் போது அதை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் நல்லது.

4. மாரடைப்பிற்கு புகை, மது, தேவையில்லாத உணவு, உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவையே காரணமாக உள்ளன.

5. புகைபிடிப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்தினாலே 50 சதவீதம் மாரடைப்பு வருவதை தடுத்துவிடலாம்.

இந்த சிறப்பு தினத்தில் நமது இதயத்தை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொள்வோம். இதய நலன் காத்திடுவோம்.

World Health Organisation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment