இதயங்களை பாதுகாக்க காய்கறி, கீரை: மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
இருதய நலனில் அக்கறை செலுத்த ஆரோக்கிய உணவு அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் கல்லூரி மற்றும் தனியார் மருத்துமனை சார்பாக மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் மற்றும் பேரணி நடைபெற்றது.

Advertisment
இருதய நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்டம்பர் 29"ஆம் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், பி.பி.ஜி நர்சிங் மற்றும் மனையியல் அறிவியல் கல்லூரி, அஸ்வின் மருத்துமனை சார்பாக, சரவணம்பட்டி காவல் நிலையம் முன்பாக கல்லூரி மாணவ,மாணவிகள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நாடகம் மற்றும் பேரணி நடைபெற்றது.
Advertisment
Advertisements
இதில், இருதய நோய் வராமல் தடுக்க காய்கறி கீரை வகை போன்ற ஆரோக்கிய உணவு வகைகளை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேரணியை பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குறிப்பாக தினமும் உடற்பயிற்சி செய்வது இருதய பாதுகாப்புக்கு ஏற்ற அனைத்து பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் நேரத்துக்கு சிறந்த உணவை எடுக்க வேண்டும் உடலுக்கு கேடு விளைவிக்கும் புகை பழக்கம், மது அருந்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள. அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்த படி பேரணி நடைபெற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"