சட்டினியின் நண்பன் இட்லிக்கு இன்று உலகம் முழுவதும் கொண்டாட்டம்

தென் இந்தியாவில் பாரம்பரிய உணவுகளாக பல்வேறு வகைகள் இருந்தாலும் இட்லியின் புகழ் ஓயாது. மேலும் இட்லிக்குப் பூர்வீகம் கர்நாடகா என்பது எத்தனைப் பேர் அறிந்த தகவல். இந்த உணவு பாரம்பரியத்தை கொண்டாடும் ஒரு பாகமாக இன்று உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் மார்ச் 30ம் தேதி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இட்லி சமைத்து சாப்பிட்டுக் கொண்டாடினர். எத்தனை வகையான காலை உணவுகள் வந்தாலும் பூ போன்ற இட்லியின் சுவைக்கு எதுவும் நிகராகாது என்றும் இந்தியர்கள் பெருமைக் கூறி வருகின்றனர்.

அப்படியென்ன உள்ளது இட்டிலியில்???

ஒரு இட்லியில் 39 கலோரிகள், 65 மில்லிகிராம் சோடியம் (உப்பு), 2 கிராம் ப்ரோடீன், 2 கிராம் நார்ச் சத்து, ஒரு மில்லி கிராம் இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம், கேல்சியம், விட்டமின் ஏ ஆகியவை உள்ளது. குறிப்பாக, கொழுப்பு பொருட்கள் இல்லாத உணவு இட்லி மட்டுமே. இதனால் தான் குழந்தைகளுக்கும், முதியோருக்கும் இட்லியைப் பரிந்துரை செய்கின்றனர் மருத்துவர்கள். அரிசி மற்றும் உளுந்தை மய்ய அரைத்து ஆவியில் வேக வைத்து எடுப்பதால் உடலுக்கு எவ்வித உபாதைகளையும் இது அளிக்காது.

எத்தனை வகை:

வட்டமான வெள்ளை நிற நிலாவைப் போல் காட்சியளிக்கும் இது, வாயில் போட்டது பூபோல் தொண்டையில் இறங்கிவிடும். இட்லியில் பல வகை உண்டு. சாதாரண இட்லியில் துவங்கி, பொடி இட்லி, மினி இட்லி, சாம்பார் இட்லி, காஞ்சிவரம் இட்லி, வெஜிடபில் இட்லி, கலர் இட்லி மற்றும் சாக்லெட் இட்லி என்று பட்டியல் பெரிசாகிக் கொண்டே போகும்.

இத்தகைய இட்லியைப் பெருமை படுத்து வகையில் ஆண்டுதோறும் உலக தினமாக கொண்டாப்படுவது அளவில்லா மகிழ்ச்சி என்று பொதுமக்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

×Close
×Close