/tamil-ie/media/media_files/uploads/2023/08/Lung-Cancer.jpg)
World Lung Cancer Day 2023
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ஆம் தேதி, உலக நுரையீரல் புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியத்தின்படி, 2020 இல் 2.2 மில்லியன் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
இதுபோன்ற சூழ்நிலைகளில், பொருத்தமான சில நடைமுறைகளை பின்பற்றி உங்களைப் பாதுகாத்துக் கொள்வது முக்கியம். அதில் ஒன்றுதான் ’நுரையீரலை சுத்தப்படுத்துதல்’.
டாக்டர் சுதீர் ராய், கருத்துப்படி, "நுரையீரல் டிடாக்ஸ்" என்பது நுரையீரல் பாதிப்பை சரிசெய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நுரையீரல் சுத்தம் செய்வது அவ்வப்போது சுவாசத்தை மேம்படுத்தவும், இருமல் போன்ற அறிகுறிகளைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது," என்று அவர் விளக்கினார்.
நுரையீரல் மாற்று மருத்துவர் ராகுல் கேந்த்ரே, இந்த செயல்முறை நுரையீரல் அல்லது சுவாச அமைப்பிலிருந்து நச்சு அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்ற உதவும் என்றார்.
இருப்பினும், மனித உடலில் இயற்கையான நச்சு நீக்கும் வழிமுறைகள் உள்ளன என்பதையும், காற்றில் உள்ள மாசுக்கள் மற்றும் துகள்களை வடிகட்டுவதிலும் அகற்றுவதிலும் நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், என்று அவர் மேலும் கூறினார்.
சிகரெட், கஞ்சா புகைப்பவர்கள் அல்லது வேப்பரைசர்ஸ் பயன்படுத்துபவர்கள், மற்றும் நுரையீரலை சேதப்படுத்தும் குளோரின், பாஸ்ஜீன், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் அம்மோனியா உள்ளிட்ட எரிச்சலூட்டும், ரசாயனங்கள் மற்றும் வாயுக்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு, நுரையீரலை சுத்தப்படுத்துதல் அல்லது நச்சு நீக்குதல் குறிப்பாக உதவியாக இருக்கும் என்று டாக்டர் ராய் விளக்கினார்.
சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது உதவும்.
இருப்பினும், நுரையீரல் நச்சுத்தன்மை நீக்குவது, நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க முடியும் என்ற கூற்றை ஆதரிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
நுரையீரலை நேரடியாக "டிடாக்ஸ்" செய்யக்கூடிய குறிப்பிட்ட நுட்பங்கள் அல்லது தயாரிப்புகள் எதுவும் இல்லை என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது நுரையீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் என்று டாக்டர் கெண்ட்ரே கூறுகிறார்.
டாக்டர் ராய் நுரையீரலை சுத்தப்படுத்துவதன் நேர்மறையான அம்சங்களை வலியுறுத்தினார், ஏனெனில் இது மருந்துகள் பயன்படுத்தாமல் உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நுரையீரல்கள் தன்னைத் தானே சுத்தம் செய்யும் உறுப்புகள், அது ஒருமுறை சரி செய்ய ஆரம்பித்த பிறகு, அவை மாசுபாட்டிற்கு ஆளாகாது.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Lung-Cancer-Image.jpg)
சிறந்த நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நினைவில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள் இங்கே.
சிகரெட் தவிர்க்கவும்
சிகரெட் புகை மற்றும் காற்று மாசுபாடு போன்ற ஆபத்தான ரசாயனங்களிலிருந்து விலகி இருப்பதுதான் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழி, என்று டாக்டர் ராய் அறிவுறுத்தினார்.
நுரையீரல் பாதிப்பைக் குறைப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் புகைப்பிடிப்பதை நிறுத்துவதே சிறந்த விஷயம். நீங்கள் மூன்று நாட்கள் அல்லது 30 வருடங்கள் புகைபிடித்திருந்தாலும் பரவாயில்லை; ஆரோக்கியமான நுரையீரலுக்கான முதல் படி அதை நிறுத்த வேண்டும், என்று டாக்டர் கேந்த்ரே கூறினார்.
வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்
டாக்டர் ராய் கருத்துப்படி, உங்களுக்கு நாள்பட்ட நுரையீரல் நோய் இருந்தாலும், வழக்கமான உடற்பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் இன்றியமையாத பகுதியாகும்.
சரியான உடற்பயிற்சி, மற்றவற்றுடன் உங்கள் நுரையீரலை இயற்கையாகவும் ஆரோக்கியமாகவும் மீட்டெடுக்க உதவும், உங்கள் உடற்பயிற்சி முறையை மாற்றுவதற்கு முன், உங்கள் மருத்துவரைப் பார்க்கவும் என்று அவர் கூறினார்,
ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
உங்கள் உணவை மாற்றுவது, உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும், குறிப்பாக உங்களுக்கு நாள்பட்ட நோய் இருந்தால், என்று டாக்டர் ராய் கூறுகிறார்.
உங்கள் உணவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகளையும், பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களையும் சேர்த்துக் கொண்டால் உங்கள் மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும், என்றார்.
நீங்கள் சுவாசிக்கும் காற்றில் கவனம் செலுத்துங்கள்
நாம் சுவாசிக்கும் காற்றினால் நமது நுரையீரல் ஆரோக்கியம் கணிசமாக பாதிக்கப்படுகிறது. ஆபத்தான அசுத்தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியமானது, முடிந்தால், உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்க விரும்பினால் அவற்றைத் தவிர்க்கவும், என்று டாக்டர் கேந்த்ரே கூறினார்.
உட்புற காற்றின் தரத்தை தூய்மையாக வைத்திருப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார். ஒரு நல்ல ஹூவரில் (hoover) முதலீடு செய்து அடிக்கடி பயன்படுத்துங்கள். வாசனை இல்லாத, இயற்கையான கிளினிங் பிரொடக்ட்ஸ் பயன்படுத்துங்கள், என்றார்.
ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போன்ற நுரையீரல் சுத்திகரிப்பு நுட்பங்கள் சுவாச ஆரோக்கியத்திற்கு சில நன்மைகளைக் கொண்டிருக்கலாம். எவ்வாறாயினும், எந்தவொரு புதிய சுகாதார நடைமுறைகளையும் முயற்சிக்கும் முன் எச்சரிக்கையாக இருப்பது மற்றும் சுகாதார நிபுணரை அணுகுவது அவசியம்.
அவர்கள் உங்கள் தனிப்பட்ட சுகாதார நிலையை மதிப்பிடலாம், சாத்தியமான அபாயங்கள் மற்றும் நன்மைகள் குறித்து உங்களுக்கு ஆலோசனை கூறலாம். புதிய சுகாதார சிகிச்சைகளை முயற்சிக்கும்போது பாதுகாப்பு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.