Advertisment

மனநலப் பிரச்சினைகளுக்கு உடல் பருமன் காரணமா? நிபுணர் விளக்கம்

மனநலப் பிரச்சனைகள் உள்ளவர்கள், உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் மற்றும் மூட்டுவலி போன்ற பிற உடல் நோய்களை உருவாக்கும் வாய்ப்பு இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம்.

author-image
WebDesk
New Update
lifestyle

World Obesity Day

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, 1975 ஆம் ஆண்டிலிருந்து உடல் பருமன் விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது, இது குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. டைப் 2 நீரிழிவு, இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்கள் போன்ற பல்வேறு தொற்றா நோய்களுக்கு, உடல் பருமன் ஒரு முக்கிய ஆபத்து காரணியாகும். இது தவிர, இது மனநலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும், இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

Advertisment

இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ஆம் தேதி உலக உடல் பருமன் தினம் (World Obesity Day) கடைப்பிடிக்கப்படுகிறது.

உடல் பருமனுக்கும், மன ஆரோக்கியத்திற்கும் இடையிலான இணைப்பு

மனநலப் பிரச்சனைகள் உள்ளவர்கள், உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் மற்றும் மூட்டுவலி போன்ற பிற உடல் நோய்களை உருவாக்கும் வாய்ப்பு இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம் என்கிறார் மருத்துவ உளவியலாளர் தாரா மேத்தா.

publive-image

மன அழுத்தம் மற்றும் கவலை போன்ற மனநல கோளாறுகள் ஒரு நபரை மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை உருவாக்க வழிவகுக்கும். இந்த நேரத்தில், மக்கள் தங்கள் உணர்ச்சிகளை சமாளிக்க ஒரு வழியாக உணவை நாடலாம். இது காலப்போக்கில் உடல் பருமனை ஏற்படுத்தும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும், என்று மேத்தா கூறினார்.

மறுபுறம், உண்ணும் கோளாறுகள் (eating disorders) உணவுடன் ஆரோக்கியமற்ற உறவை வளர்த்துக் கொள்ள வழிவகுக்கும்,

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் குறைந்த ஆற்றல், சோர்வு பற்றி புகார் கூறுகின்றனர். இது உட்கார்ந்த வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கிறது, உடற்பயிற்சிக்கான அவர்களின் உந்துதலைக் குறைக்கிறது, மேலும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

உடல் பருமன் மன ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிக எடை அதிகரிப்பு ஒருவரின் சுய மதிப்பு உணர்வை எதிர்மறையாக பாதிக்கிறது.

மன அழுத்தம் மற்றும் கவலை,பொதுவாக பருமனான மக்களிடையே காணப்படுகின்றன. அவர்கள் சமூகத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள முனைகிறார்கள், அவர்கள் பொதுவில் எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்பதை உணர்ந்து, கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையை நடத்துகிறார்கள், என்று மேத்தா விளக்குகிறார்.

உடல் பருமன் தனிநபர்களுக்கு உடல் பணிகளை திறம்பட செய்வதையும் கடினமாக்கும் என்று அவர் கூறுகிறார். பருமனான நபர்கள், முழங்கால் மற்றும் கணுக்கால் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர், இது அவர்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. முதுகுவலி அவர்களிடையே பொதுவாகக் காணப்படுகிறது, என்று அவர் கூறுகிறார்.

பருமனான நபர்கள், சமூகத்தில் தனிமை மற்றும் களங்கத்தை எதிர்கொள்ளலாம், இதனால் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுகிறது.

இந்த சுழற்சியை எப்படி உடைப்பது?

உடல் பருமன் சிகிச்சைக்கு ஒரு முழுமையான அணுகுமுறை தேவைப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நமது சமூகத்தில் உடல் பருமனுக்கு மூல காரணம் உணவு, வாழ்க்கை முறை, மரபணு, உளவியல், சமூக கலாச்சார, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் சிக்கலான கலவையாகும்.

கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவு மற்றும் பானங்களை குழந்தைகளுக்கு சந்தைப்படுத்துவதை கட்டுப்படுத்துதல்; சர்க்கரை பானங்களுக்கு வரி விதிப்பது மற்றும் மலிவு விலையில் ஆரோக்கியமான உணவுக்கு சிறந்த அணுகலை வழங்க அது பரிந்துரைக்கிறது.

நமது நகரங்களில், பாதுகாப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பொழுதுபோக்கிற்கான இடத்தை உருவாக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்தே நமது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.

தனிப்பட்ட அளவில் தீர்வுகளைப் பற்றிப் பேசுகையில், டாக்டர் ராஜீவ் கோவில், உணவுக் கோளாறுகள் அல்லது ஆறுதல் உணவு போன்ற நிலைமைகளைக் கண்டறிய அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு உளவியல் ரீதியான மதிப்பீட்டைப் பரிந்துரைக்கிறோம். பின்னர் சூழ்நிலைகள் அல்லது தூண்டுதல்களைத் தவிர்ப்பது அவசியம்.

இது தவிர, பாடி ஷேமிங் மற்றும் பச்சாதாப ஆலோசனைகளுக்குப் பதிலாக எங்கள் தகவல்தொடர்புகளில் அதிக நேர்மறையான மொழியைப் பயன்படுத்துவது தடையை கடக்க உதவும் என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment