உலக ஒசோன் தினம்; தண்ணீர் அமைப்பு - மக்கள் சக்தி இயக்கம் சார்பில் 100 மரக்கன்றுகள் நடவு

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், ஒசோன் அடுக்கு சீர்கேட்டைத் தடுக்கவும், எதிர்கால தலைமுறைக்காக பசுமையான சூழலை உருவாக்கவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் நீலமேகம் கூறினார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், ஒசோன் அடுக்கு சீர்கேட்டைத் தடுக்கவும், எதிர்கால தலைமுறைக்காக பசுமையான சூழலை உருவாக்கவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் நீலமேகம் கூறினார்.

author-image
WebDesk
New Update
Trichy Thanneer 2

நிகழ்வில் பொன்மலை மரம் பாலா, தண்ணீர் அமைப்பின் நிர்வாகிகள் செயலாளர் பேரா. கி.சதீஸ்குமார், துணை செயலாளர் ஆர்.கே.ராஜா வி.சந்திரசேகர், ரயில்வே ஏ.பி.ஒ சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உலக ஒசோன் தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் இன்று திருச்சி பொன்மலை பகுதியில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவரும், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளமான கே.சி.நீலமேகம்,  தலைமையில் மரக்கன்றுகள் நடவு விழா நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் பேசிய நீலமேகம் கூறியதாவது: "சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், ஒசோன் அடுக்கு சீர்கேட்டைத் தடுக்கவும், எதிர்கால தலைமுறைக்காக பசுமையான சூழலை உருவாக்கவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
“ஒசோன் அடுக்கு பாதுகாப்பு என்பது காற்றையும், நீரையும், மண்ணையும் பாதுகாப்பதற்கான அடிப்படை. பசுமை வளம் அதிகரிக்க வேண்டியது அவசியம். 

Advertisment

மரக்கன்றுகள் நடுதல் மட்டுமல்ல, அவற்றை பராமரித்து வளர்ப்பதும் மிகப் பெரிய பொறுப்பு. இதனை சமூகம் முழுவதும் உணர வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றது” என்றார்.

water org in Trichy 2
ஓசோன் தினம்: திருச்சியில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி

நிகழ்வில் பொன்மலை மரம் பாலா, தண்ணீர் அமைப்பின் நிர்வாகிகள் செயலாளர் பேரா. கி.சதீஸ்குமார், துணை செயலாளர் ஆர்.கே.ராஜா வி.சந்திரசேகர், ரயில்வே ஏ.பி.ஒ சுந்தரமூர்த்தி, தடகள சங்க பொருளாளர் ரவிசங்கர், மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் கனகராஜ்,  எஸ்.ஆர்.இ.எஸ் (SRES) எஸ்.ரகுபதி, காஜாமலை கரிகாலன், ஸ்ரீராம், பாலமுருகன், கொட்டப்பட்டு திருநாவுகரசு, கதிர், மோகன், மூர்த்தி, ராஜேஷ்  மற்றும்  நண்பர்கள்  , சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உற்சாகமாக பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் பசுமையைப் பாதுகாப்பதின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.

Advertisment
Advertisements

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 100-க்கும் மேற்பட்ட நாட்டு, பசுமைத் தோற்றம் தரக்கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டன.

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: