பயணங்கள் நம்மை எப்போதும் உற்சாகப்படுத்துகின்றன. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காரணமாக வீடுகளுக்குள் முடங்கியிருந்த மக்களுக்கு, நாடு முழுவதும் பயணம் செய்வதற்கான விருப்பம் அதிகரித்துள்ளது. பயணம் செய்வதற்குமுன், மக்கள் பல மாதங்களாக திட்டமிடுவது, அதற்கான தயாரிப்புகளை மேற்கொள்வதற்கு , வானிலைக்கு ஏற்ற ஆடைகளை வாங்குவது, அந்த இடத்தைப் பற்றி படிப்பது போன்ற பல விஷயங்களை மேற்கொள்கின்றனர்.
இவை அனைத்தும் முக்கியமானவை என்றாலும், சில சுகாதார அத்தியாவசியங்களைப் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும். பீ சேஃப் நிறுவனத்தின் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் காஜல் சங்வான் கூறுகையில், ஒருவர் கவனமாக இல்லாவிட்டால், அவருக்கு நோய்த்தொற்றுகள், நோய்கள் மற்றும் சிறுநீரகப் பாதை தொற்று போன்றவை ஏற்படலாம் என கூறுகிறார்.
பெரும்பாலான மக்கள், குறிப்பாக பெண்கள், சுகாதாரமற்ற கழிப்பறையைப் பயன்படுத்துவதால் சிறுநீரகப் பாதை தொற்றுக்கு ஆளாகின்றனர். கழிப்பறை பாதுகாப்பானது என்றாலும், கண்ணுக்குத் தெரியாத மில்லியன்கணக்கான கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் தாயகமாக உள்ளது.
சுத்தமான மற்றும் கறை இல்லாத கழிப்பறைகளில் இவை வாழ்கின்றன. எனவே வெள்ளையாகவும் சுத்தமாகவும் தோன்றும் கழிப்பறையை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். பொதுவாக வெளியிடங்களில் கழிப்பறையை பயன்படுத்தும்போது சானிடைசர் ஸ்ப்ரேயைப் பயன்படுத்துமாறு சங்வான் பரிந்துரைக்கிறார்.
பயன்படுத்துவதற்கு முன்னும், பின்னும் கழிப்பறை எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதிச் செய்யுங்கள். பயன்படுத்தியபின், அந்த இடத்தை பாதுகாப்புடன் விட்டுச் செல்லுங்கள்.
இது தவிர, பயணத்தின்போது பாதுகாப்பான அனுபவத்தைப் பெற நீங்கள் செய்யவேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
ஃப்ளஷ் செய்யும்போது கழிப்பறை இருக்கையை மூடவும், அதனால் பாக்டீரியா மற்றும் கிருமிகள் காற்றில் நுழையாது.
இயற்கை உபாதங்களை அடக்கி வைக்காதீர்கள். இது உங்கள் உடலில் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய வழிவகுக்கும்.
கைகள் குறிப்பாக விரல் நகங்களை நன்றாகக் கழுவவும்.
அந்தரங்க பகுதியை எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருங்கள்.
உங்கள் அந்தரங்க உறுப்புகளை பொருத்தமான வைப்ஸ்களை பயன்படுத்தி சரியாக சுத்தம் செய்யவும்.
பயணத்தின் போது சிறுநீர் கழிப்பதற்கான மிகவும் சுகாதாரமான வழிகளைப் பற்றி நீங்கள் இன்னும் யோசிக்கிறீர்கள் என்றால், இந்த எளிய விதியைப் பின்பற்றவும்: சுத்தமான தோற்றமுடைய ஒவ்வொரு மேற்பரப்பும் சுகாதரமானது இல்லை. மேலும் தண்ணீர் அதை சரியாக சுத்தம் செய்வதும் இல்லை. இந்த விதியை நினைவில் வைத்திருக்கும் வரை, நீங்கள் தெளிவாக இருப்பீர்கள். எனவே, வேடிக்கையான தோற்றமுடைய கழிப்பறையில் இருந்து விலகி இருங்கள் என சங்வான் கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil