World Turtle Day 2019 : இன்று உலக ஆமைகள் தினம். ஆங்கிலத்தில் டர்ட்டில் (Turtle) என்று அழைக்கப்படும் ஆமைகளை யாருக்குத் தான் பிடிக்காது? இந்த கடல்வாழ் உயிரினங்களில் பல்வேறு சிற்றினங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளனர்.
கடலில் இருந்து வெளியே வந்து கரையில் முட்டையிட்டு மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். முட்டையில் இருந்து வெளியேறும் ஆமைக்குஞ்சுகளை பத்திரமாக கடலுக்குள் கொண்டு செல்ல இன்று பல்வேறு அமைப்புகள் இயங்கி வருகின்றன.
ஆனால் 1983ம் ஆண்டு தாய்லாந்தில் leatherback turtles வகை ஆமைகள் இட்ட அனைத்து முட்டைகளையும் மனிதர்கள் வேட்டையாடி சென்றுவிட்டனர்.
இன்று நாம் அந்த உயிரினங்கள் வாழும் இடங்களை குப்பையாக வைத்திருக்கின்றோம். ரசாயனக் கழிவு, எண்ணெய் கழிவு, ப்ளாஸ்டிக் குப்பைகள் என கடலே இன்று குப்பையாக காட்சி அளிக்கிறது. இன்றைய தினத்தில் இவ்வுரியினங்களின் நீடித்த நிலைப்புத் தன்மையை உறுதி செய்ய தீர்மானம் எடுத்துக் கொள்வோம்.
leatherback turtles - உலகின் அதிக அளவு எடை கொண்ட நான்காவது பெரிய ஊர்வனவாகும். 6.5 அடி வரை வளரும் இந்த ஆமைகள் 600 கிலோ வரை எடை கொண்டவை. ஒவ்வொரு வருடமும், இனப்பெருக்க காலத்திற்கு தேவையான கால தட்பவெட்ப நிலையை கண்டறிய 6000 மைல்கள் வரை பயணிக்கும் இந்த ஆமைகள்.
இந்த உலகில் 220 மில்லியன் ஆண்டுகள் இந்த உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. டைனோசர் காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் இவை. இவை இன்றும் உயிருடன் இருக்கின்றன. இவை இனி வரும் காலங்களிலும் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் தான் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
டர்ட்டிலுக்கும் டர்டாய்ஸ்க்கும் என்ன வித்தியாசம் ?
டர்ட்டில் நீர் வாழ் உயிரினமாகும். டர்டாய்ஸ் என்பது நில வாழ் ஆமையாகும்.
டர்டாய்ஸ்கள் சைவ உணவு விரும்பிகள், டர்ட்டில்களுக்கு அனைத்து வகையான உணவுகளும் பிடிக்கும்.
டர்டாய்ஸ்களின் ஓடுகள் மிகவும் கடினமாக இருக்கும்.
சின்னஞ்சிறிய கடல் ஆமைகள் டெர்ராபின்ஸ் என்ற நீர் நிலைகளில் வாழும்.
டர்டாய்ஸ்கள் (நிலத்தில் வாழும் ஆமைகள்) நீந்தாது.
கடல் ஆமைகள் 80 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. நில ஆமைகள் ஆனால் 200 வருடங்கள் வரை வாழக்கூடும்.
மேலும் படிக்க : அழிந்து வரும் வன உயிரினங்கள் ஒரு பார்வை
இந்திய பெருங்கடலில் நான்கு வகை கடல் ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. 24 வகையான நன்னீர் ஆமைகளும் இந்தியாவில் காணப்படுகிறது. நில ஆமைகளில் நான்கு சிற்றினங்களைக் கொண்டுள்ளது இந்தியா. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நன்னீர் ஆமைகளை நாம் அதிக அளவு காணலாம்.
டர்ட்டில் - ஆல்காக்கள், பாம்புகள், தவளைகள், மீன்கள், பூச்சியினங்கள் என கடலுக்குள் வாழும் சிறிய உயிரிகளை தின்று வாழும் உயிரினமாகும்.