/indian-express-tamil/media/media_files/T92TdJxhjhruQja365KM.jpg)
உங்களுக்கு இளம் வயதில், சர்க்கரை நோய் ஏற்பட்டால், ரத்ததில் இருக்கும் சர்க்கரை கண்களின் ரெட்டினாவை பாதிக்கிறது. அமெரிக்க ஆய்வுகள் இதை டயப்படிக் ரெடினோபதி என்று அழைக்கிறார்கள்.
இளமையாக இருக்கும்போது டைப் 1 சர்க்கரை நோய் ஏற்பட்டவர்களிடத்தில் 52 % இந்த டயப்படிக் ரெடினோபதி உள்ளது. இதுபோல டைப் 2 சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு 56 % உள்ளது. உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டால் உங்கள் கண்களை முழுவதுமாக வருடத்தில் ஒரு முறையாவது பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ரெட்டினாவின் முழு புகைப்படத்தையும் எடுத்துகொள்வது நல்லது.
டயப்படிக் ரெடினோபதி என்றால் என்ன
நமது ரத்ததில் உள்ள அதிக சர்க்கரை கண்களின் ரெட்டினாவை பாதிக்கும். நமது கண்களுக்கு பின்னால் இருக்கும் வெளிச்சத்தை உணரும் மெல்லிய சதைப்பகுதிதான் ரெட்டினா. பாதிக்கப்பட்ட இடங்களால் ரெட்டினாவிற்கு ஆக்ஸிஜென் செல்வது தடைபடும். இதனால் கண்கள் புதிய ரத்த குழாய்களை உருவாக்கும். இவை வலிமையற்று இருப்பதால் இது எளிதாக உடைந்து ரத்த கசிவு ஏற்படும். மேலும் இந்த ரெட்டினாவின் ரத்த குழாய்கள் பாதிக்கப்பட்டால், திரவம் போன்ற எடிமா உருவாகும். இது ரெட்டினாவின் நடுப்பகுதியில் உருவாகும். இந்த திரவத்தால் அழுத்தம் உருவாகி, உருவங்களை, காட்சிகளை மூளைக்கு கொண்டு செல்லும் நரம்புகள் பாதிக்கப்படும். இதனால் கண் பார்வை இழக்கலாம். பார்வை மங்குதல் ஏற்படும்.
2030-குள் உலகம் முழுவதும் 19.1 கோடி பேருக்கு இந்த நிலை ஏற்படும் அபாயம் இருக்கிறது. இந்நிலையில் இது ஏற்படும்போது பெரும்பாலும் எந்த அறிகுறிகளும் இருக்காது
என்ன பரிசோதை இருக்கிறது?
ரத்த சர்க்கரையை கட்டுபாட்டில் வைத்திருப்பது, ரெட்டினல் லேசர், ஊசி போடுவது என்று பல்வேறு சிகிச்சைகள் உள்ளது. விழித்திரை அறுவை சிகிச்சை உள்ளது ( vitreoretinal surgery).
இந்த நிலை இருப்பதை கண்டறிய, கண்மணியை விரிவடையச் செய்யாமல் ரெட்னாவின் நிலையை படம் எடுக்கும் பண்டஸ் போட்டோகிராப்பி ( fundus photography) உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.