பட்டாம்பூச்சி மாதிரி... இப்படி தூங்கினால் கேன்சர் வரும்: எச்சரிக்கும் டாக்டர் சொக்கலிங்கம்
இரவில் தூங்கும்போது மனிதனுக்கு துக்கம் (கவலை) என்ற ஒன்று இருக்கவே கூடாது. உயிருடன் இருப்பதற்கு இரவில் இறைவனுக்கு நன்றி கூறிவிட்டு படுத்த உடன் 7 நிமிடத்தில் தூங்க வேண்டும். குறைந்தபட்சம் 7 மணி நேர தூக்கம் அவசியம் என்கிறார் மருத்துவர் சொக்கலிங்கம்.
இரவில் தூங்கும்போது மனிதனுக்கு துக்கம் (கவலை) என்ற ஒன்று இருக்கவே கூடாது. உயிருடன் இருப்பதற்கு இரவில் இறைவனுக்கு நன்றி கூறிவிட்டு படுத்த உடன் 7 நிமிடத்தில் தூங்க வேண்டும். குறைந்தபட்சம் 7 மணி நேர தூக்கம் அவசியம் என்கிறார் மருத்துவர் சொக்கலிங்கம்.
மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக விளங்குவது தூக்கம். உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், சிலருக்கு இரவு நேரங்களில் சரியாக தூக்கம் வராமல் விழிப்பு ஏற்படும். இது இயல்பான ஒன்றுதான். ஆனால், தூங்கிய பிறகு மிகக்குறுகிய இடைவெளியிலேயே விழித்துக் கொள்வர். இதற்கான காரணம் தூங்கும் நிலை சரியில்லாமல் இருப்பதே ஆகும். தூக்க நிலை சரியில்லாதபோது பல உடல் உபாதைகளும் ஏற்படக்கூடும்.
Advertisment
தூக்கமும், மகிழ்ச்சியுன் பட்டாம்பூச்சி போன்றது. அமைதியான நிலையில், இருக்கும்போது அது நம்மைத் தேடி வருகிறது. இரவில் சரியாக தூங்காமல் இருப்பதால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இரவில் தூங்குவதற்கு முன்பு 3 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும். இரவில் தூங்கும்போது மொபைல் பார்க்க கூடாது என்று எச்சரிக்கிறார் மருத்துவர் சொக்கலிங்கம்.
உடல் பருமன், புகை-மதுப்பழக்கம், இரவில் தூக்கமின்மை பிரச்னை இருந்தால் கேன்சர்(புற்றுநோய்) பிரச்னை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவர் சொக்க்கலிங்கம். எந்த நிலையில் தூங்கும் போது நல்ல தூக்கத்தைப் பெறவும், உடலில் பிரச்னைகள் ஏற்படாதவாறும் எப்படி தூங்குவது என்பதைக் காணலாம்.
தவறான நிலையில் தூங்குவதால் உண்டாகும் பிரச்னைகள்:
Advertisment
Advertisements
ஒருவர் இரவு உட்கொள்ளும் உணவு மற்றும் தூங்கும் நிலை பொறுத்தே இரவில் நல்ல உறக்கத்தை பெற முடியும். தவறான நிலையில் தூங்கும் போது அடிவயிற்றில் வலி, நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் அடைதல் போன்றவை ஏற்படும். மேலும் செரிமானப் பிரச்சனை ஏற்பட்டு அஜீரணக் கோளாறு ஏற்படும். எனவே, இரவு நேரத்தில் உட்கொள்வது மற்றும் தூங்கும் நிலை இவற்றை சரியாக வைத்துக் கொண்டால் மட்டுமே நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும்.
தூங்குவதற்கான சரியான நிலை:
நம்மில் பலர் தூங்கும் போது பல்வேறு நிலைகளில் தூங்குவர். முதுகுப் புறத்தை அடியில் வைத்து நேராக தூங்குவது, வயிற்றுப்பகுதியை கீழே வைத்து குப்புறப்படுத்து தூங்குவது, வலது புறம், இடது புறம் போன்ற பல்வேறு தூக்க நிலைகள் உள்ளன. இவற்றில் எந்த நிலை சரியான தூக்க நிலை என்பது பலரும் அறியாத ஒன்றாகும்.
வலது புறமாகத் தூங்கும் போது வயிற்றுப்பகுதியானது முதுகெலும்பு மற்றும் உணவுக் குழாய்க்கு மேல் நோக்கி அமைந்திருக்கும். இதனால், வயிற்றுப் பகுதி குறுகி இல்லாமல் உப்பியவாறு அமையும். மேலும், இவ்வாறு தூங்கும் போது அசிடிட்டி உண்டாகும். வயிற்றுப் பகுதி மேல்நோக்கியவாறு தூங்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் குறைவாகத் தான் இருக்கும். இருப்பினும் இந்த நிலையில் அசிடிட்டி பிரச்சனையைச் சந்திக்க வாய்ப்புண்டு. வயிற்றுப்பகுதி கீழே உள்ளவாறு படுப்பதால் அடிவயிற்றில் கடுமையான வழி உண்டாகும். மேலும் இது செரிமானம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் அஜீரணக் கோளாறை ஏற்படுத்துகிறது.
இந்த பிரச்னைகள் ஏதும் இல்லாமல், நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெற இடப்பக்கம் தூங்குவதே சரியான முறையாகும். இடது புறமாக உறங்கும் போது செரிமானம் சிறப்பாகச் செயல்படும். எனவே, மற்ற நிலைகளில் உறங்குவதை விட இடது பக்கமாக உறங்குவது ஆழ்ந்த உறக்கத்தைத் தருவதாக அமைகிறது. அதாவது இடது புறமாக தூங்கும் போது, உடலில் வலது புறமாக இருக்கக்கூடிய உறுப்புகள் புவியீர்ப்பு விசையின் மூலம் ஈர்க்கப்பட்டு விரைவாக ஜீரணமடைய உதவுகிறது. இதன் மூலம், இரவில் நல்ல தூக்கம் பெறுவதுடன், காலை நேரத்தில் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
நல்லதை கூட்டி, கெட்டதை கழித்து, அறிவை பெருக்கி, நேரத்தை சீராக வகுத்து எவனொருவன் சமநிலையில் வாழக் கற்றுக் கொள்கிறானோ, அவர்கள் அனைவரும் 100 வருடம் கடந்து வாழ்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்கிறார் மருத்துவர் சொக்கலிங்கம்.