சினிமா டூ சின்னத்திரை ஹீரோயின்: டஸ்க்கி பியூட்டி வெண்ணிலா!

முதல் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ஹீரோவை தான் காதலிக்கிறாராம் நட்சத்திரா.

Tamil Serial News, Yaaradi Nee Mohini Nakshathra
Tamil Serial News, Yaaradi Nee Mohini Nakshathra

Tamil Serial News:  ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஹீரோயினாக நடித்து வருபவர் நட்சத்திரா குட்டிசேரி. வெள்ளித்திரையில் கால் பதித்த கையோடு சின்னத்திரையிலும் நுழைந்தவர்.

Tamil Serial News, Yaaradi Nee Mohini Nakshathra
டஸ்க்கி பியூட்டி நக்‌ஷத்ரா

அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளாவில் தான். தமிழில் நடிக்க வருவதற்கு முன்பே மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் சினிமாவில் சிறந்த வாய்ப்புகளை தேடி சென்னைக்கு கிளம்பியிருக்கிறார். தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு ஜெயக்குமார் இயக்கிய ‘கிடா பூசாரி மகுடி’ என்ற படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராம்தேவ் என்பவர் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் சரிவர வாய்ப்பு அமையாததால் சீரியல் பக்கம் கவனத்தை செலுத்தினார் நட்சத்திரா.

Tamil Serial News, Yaaradi Nee Mohini Nakshathra
ஸ்டைலாக…

‘யாரடி நீ மோகினி’ சீரியலில் கொடுமைக்கார மாமியாரையும், முத்தரசு ஒருதலையாக காதலித்து வந்த ஸ்வேதாவையும் ஒரே வீட்டில் சமாளித்து அங்கேயே வாழ்ந்து வருகிறார் வெண்ணிலாவாக நடிக்கும் நட்சத்திரா. இந்த சீரியலில் இவருடைய அப்பாவித்தனமான பேச்சும் குழந்தைத்தனமான முகமும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. வெண்ணிலாவின் நடிப்புக்கு கிராம புற ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Tamil Serial News, Yaaradi Nee Mohini Nakshathra
கேரள பாரம்பரிய உடையில்…

முதல் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ஹீரோவை தான் காதலிக்கிறாராம் நட்சத்திரா. அவர்கள் காதலுக்கு இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதால் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார்களாம். நட்சத்திராவுக்கு நடிப்பை தவிர, நிறைய ஊர் சுத்தப் பிடிக்குமாம். அதாவது, டிராவல் பண்ணப் பிடிக்குமாம். ’மத்தபடி படிப்புல நான் கில்லி. அதனால படிச்சுகிட்டே இருப்பேன்’ என காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார்.

Tamil Serial News, Yaaradi Nee Mohini Nakshathra
தோழிகளுடன்….

தனது குடும்பத்தைப் பற்றி நேர்க்காணலில் குறிப்பிட்டிருந்த நட்சத்திரா, ‘அப்பா, அம்மா, உறவினர்கள்னு எல்லாருமே கேரளாவுல இருக்காங்க. எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா… அவ பேரு நிலா. அவளும் ஒரு மலையாளப் படத்துல நடிச்சிருக்கா. படிப்பு ரொம்ப முக்கியம்னு அப்பா அம்மா சொன்னதால இப்ப அதுல கவனம் செலுத்திட்டு இருக்கா. சீக்கிரமே சினிமாவுக்கு வரப்போறா. எங்க ரெண்டு பேருக்கும் அழகான பெயர் வைக்கணும்னு தேடித்தேடி, ‘நட்சத்திரா, நிலா’னு அம்மா அப்பா பேர் வச்சாங்களாம்’ என்றார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Yaaradi nee mohini nakshathra tamil serial news

Next Story
பச்சை மிளகாய் போதும்ங்க..! காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்Green Chilli Chutney Home Style Recipes Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com