புதுச்சேரி மாநிலத்தின் பிராந்தியமான ஏனாம் கன்னியா பரமேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு 23 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது. அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உலகம் முழுவதும் வரலட்சுமி நோன்பு விரதம் இருந்து பொதுமக்கள் அம்மனை வழிபடுவது வழக்கம் வரலட்சுமி நோன்பு விரதம் இருந்தால் குடும்பம் செழிக்கும் தேக ஆரோக்கியம் கிடைக்கும், குடும்பத்தில் லட்சுமி கடாட்சரம் அமையும் என்று ஐதீகம் இதனால் இன்று அம்மன் கோவில்களில் வரலட்சுமி நோன்பு விரதம் இருந்து பெண்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து அம்மனை வழிபடுவது வழக்கம். இன்று
மற்றொரு சிறப்பு ஆடி மாதம் 4 இம் வெள்ளிக்கிழமை என்பதால் பல்வேறு அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பிராந்தியமான ஏனாம் நகரப் பகுதியில் உள்ள கன்னியா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆரிய வைசிய செட்டியார்கள் ஒன்று கூடி வரலட்சுமி நோன்பு விரதம் இருந்து ரூபாய் 23 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை வைத்து பத்து ரூபாய் 20,50,100, 200, 500 ரூபாய் நோட்டுகளால் அம்மனை முழுவதுமாக அலங்கரித்தனர்.
புதிய ரூபாய் நோட்டுகளை மாலையாக கட்டி அலங்கரித்தனர். பல்வேறு வண்ண கலரில் ரூபாய் நோட்டுகள் இருந்ததால் இந்த அலங்காரத்தில் அன்பனை பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது
மேலும் அம்மன் கையில் வெள்ளி குடம் வைத்து அதிலிருந்து கட்டு கட்டாக பணக்கட்டுகள் விழுவது போன்று மிக அருமையாக அலகரிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு அம்பாள் காட்சியளித்தார்.
இதைக் கண்டு களிக்க ஏனாம் பகுதியில் இருந்து பல்வேறு பொதுமக்கள் வந்து அம்மனை தரிசித்து விட்டு சென்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி