/indian-express-tamil/media/media_files/2025/03/23/2hhnKoYJwkIuXfDkQ6a0.jpg)
தூக்கம் மற்றும் சலிப்பின் விளைவாக கொட்டாவி ஏற்படும். இது உங்கள் உடலை விழிப்புடன் வைத்திருக்க உதவி செய்கிறது. ஆனால் இரவும், பகலும் அதிகமாக கொட்டாவி ஏற்பட்டால் அது உடல் நல பாதிப்பின் அறிகுறியாக இருக்கும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Do you yawn too much? You could be suffering from an iron deficiency
அதிகமாக கொட்டாவி விடுவது இருதய பிரச்சனைகள் அல்லது மனநல பிரச்சனைகள் போன்ற பாதிப்புகளை குறிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இது எப்போது கவலைக்குரியதாக மாறும்?
அடிக்கடி கொட்டாவி வரும் போது மூச்சுத் திணறல், தலைச் சுற்றல் போன்று தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். இது பெரும்பாலும் திடீரென ஏற்படும் தன்மை உடையது. எனவே, கவனமாக இருத்தல் அவசியம்.
அதிகப்படியான கொட்டாவி என்ன வகையான குறைபாடுகள் மற்றும் உடல் பிரச்சனைகளைக் குறிக்கலாம்?
தூக்கமின்மை: சரியான தூக்கம் இல்லாததால் கொட்டாவி அதிகமாகும்.
சலிப்பு அல்லது சோர்வு: மனச் சோர்வு ஏற்படும் போது அடிக்கடி கொட்டாவி வரக் கூடும்.
இருதய பிரச்சனைகள்: மூளையில் இருந்து இதயம் மற்றும் வயிறு வரை செல்லும் வேகஸ் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டால் கொட்டாவி அதிகமாக இருக்கும்.
நரம்பியல் பிரச்சனைகள்: சில சந்தர்ப்பங்களில், அதிகரித்த கொட்டாவி கால்-கை வலிப்பு போன்ற நரம்பியல் பிரச்சனைகளுடன் தொடர்பு உடையதாக இருக்கலாம்.
மூளைப் பிரச்சனைகள்: மிகவும் அரிதாக இருந்தாலும், அதிகப்படியான கொட்டாவி சிலருக்கு மூளைக் கட்டியைக் குறிக்கலாம்.
இது இரும்புச் சத்து குறைபாடு மற்றும் குறைந்த ஆக்ஸிஜன் அளவுகளுடன் தொடர்புடையதா?
"இரத்தத்தில் ஆக்ஸிஜன் சீராக செல்வதற்கு இரும்பு சத்து அவசியம். இரும்புச் சத்து அளவு குறைவாக இருக்கும் போது, உடலில் ஆக்ஸிஜன் விநியோகம் குறையும். இதனை சமன் செய்வதற்காக கொட்டாவி வரும்" என்று மருத்துவர் கோபால் தெரிவித்துள்ளார்.
தூக்கத்தில் மூச்சுத் திணறல் அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய்கள் போன்ற பிரச்சனைகள் இருந்தால், குறைந்த ஆக்ஸிஜன் அளவு மற்றும் அடிக்கடி கொட்டாவி வருவதற்கு வழிவகுக்கும்.
வீட்டு வைத்தியம் மூலம் இதை எப்படி சரி செய்யலாம்?
சரியாக தூங்க வேண்டும்: சீரான தூக்கம் இதற்கு மிகவும் அவசியம். எனவே, தூங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கவும்.
இரும்புச் சத்தை அதிகரிக்க வேண்டும்: இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகள், ஆப்பிள், பெர்ரி போன்ற பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நீர்ச்சத்து குறையாமல் இருக்க வேண்டும்: நீரிழப்பு மற்றும் இரும்புச் சத்து குறைபாடு ஆகியவை ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொண்டுள்ளன.
உடற்பயிற்சி: ஆக்ஸிஜன் அளவு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி உதவும்.
வீட்டு வைத்திய முறை லேசான பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்தாலும், தொடர்ந்து கொட்டாவி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.