சென்னைக்கு அருகே ஒரு ஊட்டி! – ஏலகிரி தெரியுமா?

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலை தான் ஏலகிரி. ஏனைய மலைகள் போல் புகழ்பெறவில்லை என்றபோது, ஏலகிரியில் இரசிக்க வேண்டிய விஷயங்கள் நிறை உண்டு. ஏலகிரி என்பது அமைதியான நகரம், அந்நகரம் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் இடம் , பசுமையான பூங்காக்கள், ஏரிகள் என இன்னும்…

By: November 4, 2019, 7:23:21 PM

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலை தான் ஏலகிரி.

ஏனைய மலைகள் போல் புகழ்பெறவில்லை என்றபோது, ஏலகிரியில் இரசிக்க வேண்டிய விஷயங்கள் நிறை உண்டு.

ஏலகிரி என்பது அமைதியான நகரம், அந்நகரம் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் இடம் , பசுமையான பூங்காக்கள், ஏரிகள் என இன்னும் கூறிக்கொண்டே செல்லலாம். சென்னையில் இருந்து ஏலகிரிக்கு செல்ல ஏறக்குறைய 5 மணி நேரம் ஆகும்.

ஏலகிரி செல்ல சிறந்த நேரம்:

ஏலகிரி ஆண்டு முழுவதும் இனிமையான குளிர் காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் இங்கு செல்லலாம். ஆனால் கோடைக்கால விழாவைப் பார்க்க விரும்பும் மக்களுக்கு, மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை சிறந்த நேரம் ஆகும்.

ஏலகிரிக்கு செல்வது எவ்வாறு:

ஏலகிரிக்கு அருகில் உள்ள விமான நிலையம் பெங்களூர் விமான நிலையம், அங்கிருந்து மீதமுள்ள தூரத்தை கடப்பதற்கு பேருந்துகள் அல்லது வாடகை வண்டிகள் உள்ளன. மேலும் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் ஏலகிரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே இதன் மூலம் ஏலகிரியை அடையலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Yelagiri tourist spot near chennai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X