/indian-express-tamil/media/media_files/2025/06/21/whatsapp-image-202-coimbatore-2025-06-21-11-39-20.jpeg)
Coimbatore
இந்தியாவின் தொன்மையான மற்றும் உடல்நலம் பேணும் கலையான யோகா, உலகம் முழுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினம், யோகாவின் சிறப்பையும் அதன் பலன்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு சிறப்பான வாய்ப்பாக அமைகிறது. இந்த ஆண்டு, கோவை மாவட்டம், கோவைபுதூர் பகுதியில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு, யோகாவின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.
கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு, சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு அசாதாரண முயற்சியில் ஈடுபட்டனர். ஏழு வயது சிறு குழந்தைகள் முதல் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை இதில் ஆர்வம் பொங்க கலந்துகொண்டனர்.
இந்த மாணவர்கள் அனைவரும் 40 நிமிடங்கள் இடைவிடாமல், 20க்கும் மேற்பட்ட பல்வேறு யோகாசனங்களை எந்தவித சோர்வுமின்றி செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். பாத ஹஸ்தாசனம், உட்கட்டாசனம், திரிகோண ஆசனம், புஜங்காசனம், பாலாசனம் போன்ற பல கடினமான ஆசனங்களையும் திறம்பட செய்து காண்பித்தனர்.
இந்த நிகழ்வு, வெறும் யோகா தினக் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், இளைய தலைமுறையினர் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த தளமாக அமைந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.