தவளை போஸ் அல்லது மண்டூகாசனா, ஒரு மாதத்திற்கு தினமும் பயிற்சி செய்தால் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா?
மண்டுகாசனம் என்பது சமஸ்கிருத சொல். இதில் மண்டுகா என்பது தவளை. இந்த போஸ் தவளை தோரணையின் இயற்பியல் அம்சத்தை பிரதிபலிப்பதோடு, இயற்கையைக் கவனிப்பதன் மூலம் உள்ளார்ந்த அமைதி, தியானம் பற்றிய யோசனையையும் குறிக்கிறது.
யோகா பயிற்சியாளர் ஜூஹி கபூர் பகிர்ந்த வீடியோ
மண்டுகாசனம், பாலியல் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு
ஹைபோதாலமிக்-பிட்யூட்டரி-ஓவேரியன் அக்சஸ் (Hypothalamic-Pituitary-Ovarian) முதன்மையாக பெண் இனப்பெருக்க அமைப்பின் ஒழுங்குமுறையுடன் தொடர்புடையது, அதே சமயம் ஹைபோதாலமிக்-பிட்யூட்டரி-கோனாடல் அக்சஸ் (Hypothalamic-Pituitary-Gonadal) ஆண்களின் இனப்பெருக்க அமைப்பை ஒழுங்குபடுத்துகிறது.
இந்த ஹார்மோன் அக்சஸ் கருவுறுதல் மற்றும் ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மண்டுகாசனா அல்லது தவளை போஸ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் சில நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இந்த விளைவுகள் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை மற்றும் தனிநபர்களிடையே வேறுபடலாம், என்று யோகா பயிற்றுவிப்பாளர் ஃபெனில் புரோஹித் விளக்கினார்.
கெரண்டா சம்ஹிதாவில் (Gheranda Samhita) குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய ஆசனங்களில் இதுவும் ஒன்றாகும். ஹதரத்னாவலியின்படி (Hatharatnavali) சிவபெருமான் போதித்த தோரணங்களில் மண்டூகாசனம் ஒன்றாகும். இது வஜ்ராசனா ஆசனங்களின் குழுவின் கீழ் வருகிறது, என்று புரோஹித் விளக்கினார்.
எப்படி செய்வது?
மேலே வீடியோவில் காட்டியபடி, யோகா மேட்டில், தவளைப் போல படுத்துக் கொண்டு இந்த ஆசனத்தை செய்யவும்.
நீங்கள் இப்போது தான் புதிதாக இந்த ஆசனம் செய்ய போகிறீர்கள் என்றால், தலா 3 சுற்றுகள் செய்யவும். ஒவ்வொரு முறையும் 3-5 சுவாசத்தை நன்கு உள்ளிழுத்து வெளியே விடவும்.
போதுமான பயிற்சிக்குப் பிறகு 10-15 சுவாசங்களுக்கு ஒரு சுற்று போதுமானது, என்று புரோஹித் கூறினார்.
குறிப்பு: பொதுவாக யோகா அனைவரும் செய்யலாம், மேலும் அவை தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படலாம்.
இருப்பினும் கணுக்கால், முழங்கால் அல்லது இடுப்பு காயங்கள், நாள்பட்ட இதய நிலைகள், கடுமையான முதுகுவலி மற்றும் கிளௌகோமா மற்றும் கண்புரை போன்ற கடுமையான கண் கோளாறுகள் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வயிறு, மார்பு, முழங்கால் அல்லது கால்களில் அறுவை சிகிச்சை செய்தவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“