யோகா ஒரு அறையில் அல்லது அமைதியான இடத்தில் அமர்ந்து ஆசனங்களை செய்வதுதான் யோகா என்று நீங்கள் இதுவரை நினைத்திருந்தால் அந்த கருத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். ஏனென்றால், நீங்கள் சாப்பிடும்போது கூட யோகாசனம் செய்கிறீர்கள் என்கிறார்கள்.
வசதி வாய்ப்புகள், வாழ்க்கை முறை மாறிவிட்ட சூழலில் உணவு மேசைகள் நாம் தரையில் சம்மனமிட்டு அமர்ந்து சாப்பிடுவதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்துவிட்டது.
இதனால், ஒருவர் தரையில் அமர்ந்து சாப்பிடாமல் உணவு மேசையில் அமர்ந்து சாப்பிட்டால் என்ன பிரச்னை என்று இயல்பாகவே கேள்வி எழலாம். இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒருவர் சாப்பிடும்போது தரையில் சம்மனமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுவதோடு மட்டுமில்லாமல் சுறுசுறுப்பை மேம்படுத்தவும் உதவுவதால் சாப்பிடும்போது சம்மனமிட்டு (சுகாசன) நிலையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து ருஜுதா திவேகர் குறிப்பிடுகையில், “நம்மில் சிலர் ஒரு சிறப்பு அல்லது ஒரு உடற்பயிற்சி திட்டத்தை பின்பற்றுவதில் மட்டுமே ஆர்வம் கொள்ள முயற்சிக்கிறோம். இது நாம் தினசரி செய்யும் சிறிய விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒன்று சேர்ந்து நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.” இதை நாம் அதிகம் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
சம்மனமிட்டு ஏன் அமர வேண்டும்?
சுகாசனாவில் உட்கார்ந்திருப்பது ஆரோக்கியத்தின் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அவை:
* இது முதுகெலும்பு சீரமைக்கப்பட்டு தோள்கள் சதுரமாக இருப்பதால் ஒருவரின் தோரணையை மேம்படுத்த உதவுகிறது.
*ஒருவர் சாப்பிடும்போது இது கவனத்தை மேம்படுத்துகிறது. அதோடு, அதிகப்படியான உணவைத் தடுக்கிறது.
* இது வயிற்றுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் டி போன்ற நுண்ணிய ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைப்பதை மேம்படுத்துகிறது.
* இது உடலை உற்சாகமாக வைத்திருக்கிறது மற்றும் கீழ் உடலின் வலிமையையும் நிலைத்தன்மையையும் உருவாக்க உதவுகிறது.
தற்போது 12 வார உடற்பயிற்சி திட்டத்தை நடத்தி வரும் ருஜுதா திவேகர், ஒருவர் தங்கள் கையால் சாப்பிடுவதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். “பாரம்பரியமாக, சாப்பிடுவது உங்கள் வயிற்றில் உள்ள செரிமான நெருப்புக்கு உணவுப் பிரசாதமாக கருதப்படுகிறது. எனவே, நீங்கள் உண்ணும் உணவு உங்கள் கைகளாலும் பிரசாதம் இதயப்பூர்வமாகவும் இருக்க வேண்டும். மேலும், சாப்பிடும் போது கேட்ஜெட்டுகள் இருக்க கூடாது” என்று கூறினார்.
* மேலும், இந்த முறை கடினமான உடல் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக கருதப்படுகிறது.
* இது கணுக்கால், முழங்கால்கள் மற்றும் இடுப்பு மூட்டுகளில் நெகிழ்வுத்தன்மையை உருவாக்க உதவுகிறது.
* இது செறிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது பயனுள்ள தியான பயிற்சிகளுக்கு தேவைப்படுகிறது.
* இது ‘ஈஸி போஸ்’ என்று அழைக்கப்பட்டாலும், முழு உடலின் எடையை பிட்டம் மட்டுமே தாங்குவதால் நீண்ட காலத்திற்கு தோரணையை பராமரிப்பது கடினமாக கருதப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.