கோடைக்காலம் நெருங்கி வருவதால், உடலின் இயற்கையான குளிர்ச்சி அமைப்புகளுக்கு (natural cooling system) ஆதரவளிப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக மூச்சுப்பயிற்சி மற்றும் மென்மையான அசைவுகள் மூலம், உடலை அமைதிப்படுத்தவும் குளிர்விக்கவும் உதவும் பயிற்சிகளை நாம் நாட வேண்டும்.
அனைத்து வயதினரும், அனைத்து நிலையினரும் செய்யக்கூடிய மூன்று எளிய மற்றும் சக்திவாய்ந்த யோகா ஆசனங்கள் இங்கே: இவை உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை வெளியிட உதவுகின்றன.
பாலாசனம் (Child’s Pose)
/indian-express-tamil/media/media_files/2025/04/26/MOaqVcmvcr14ynN1ssqU.jpg)
தரையில் முட்டி போட்டு, குதிகால்களை அகற்றி வைக்கவும். கால்விரல்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் குதிகால்களில் அமரவும்.
மூச்சை வெளியே விட்டு, முன்னோக்கி குனிந்து, உங்கள் நெற்றியை பாயில் அல்லது மென்மையான தலையணையில் வைக்கவும்.
கைகளை முன்னோக்கி நீட்டலாம் (cooling variation) அல்லது உடலின் பக்கவாட்டில் வைக்கலாம் (more internalized variation).
இரண்டு விதமாகவும் முயற்சி செய்து பாருங்கள்:
முட்டிகள் ஒன்றாக: இது உங்களை நிலைகொள்ளச் செய்து, உள்நோக்கி கவனத்தை செலுத்த உதவுகிறது.
முட்டிகள் அகலமாக: இது வயிறு மற்றும் மார்புப் பகுதியில் இடவசதியை உருவாக்குகிறது, இதனால் சுவாசம் சீராக நடைபெறுகிறது.
நாம் முன்னோக்கி குனிந்து தலையைத் தாழ்த்தும்போது, நமது நரம்பு மண்டலத்திற்கு ஓய்வெடுக்க சமிக்ஞை அனுப்புகிறோம். இந்த ஆசனம் சிம்பதெட்டிக் ஆக்டிவிட்டி (our “fight-or-flight” mode) செயல்பாட்டைக் குறைக்கிறது, ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக, முட்டிகள் அகலமாக இருக்கும் நிலை, கோடைக்கால வெப்பத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
2. அர்த்த மத்ஸ்யேந்திராசனம் (Half Pose of Sage Matsyendra)
/indian-express-tamil/media/media_files/2025/04/26/0tXrBK8OyIB7v4tnjy2J.jpg)
உங்கள் யோகா பாயில் குறுக்காக கால்களை மடித்து உட்காருங்கள்.
வலது கையை இடது முட்டியின் மீது வைத்து, உடலை இடது பக்கம் திருப்பவும்.
உங்கள் முதுகெலும்பின் அடிப்பகுதியில் இருந்து தோள்பட்டை வரை திருப்பவும்.
உடலை பாயிலிருந்து உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும், வளைக்கும்போது, உங்கள் கீழ் முதுகில் மென்மையாக இருங்கள்.
உங்கள் இடது கை, உங்கள் இடுப்புக்கு சற்று பின்னால் பாயில் வைக்கப்பட்டிருக்கும்.
மெதுவாக விடுவித்து, மறுபுறமும் இதேபோல் செய்யவும்.
இந்த ட்வீஸ்ட் கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகளுக்கு ஆதரவளிக்கிறது. இவை அதிகமாக செயல்படும்போது, உடலில் அழற்சி மற்றும் எரிச்சல் அதிகரிக்கக்கூடும். அர்த்த மத்ஸ்யேந்திராசனம் போன்ற உட்கார்ந்த நிலையில் செய்யப்படும் திருப்பம், மெதுவான, உணர்வுப்பூர்வமான சுவாசத்துடன் செய்யும்போது, கழிவுகளை வெளியேற்றவும், வயிற்று உறுப்புகளை மசாஜ் செய்யவும், உடலில் சேமிக்கப்பட்ட வெப்பத்தை வெளியிடவும் உதவுகிறது.
3. பவனமுக்தாசனம் (Wind-Relieving Pose)
/indian-express-tamil/media/media_files/2025/04/26/uiJn2Hiqpe8a7hZgZA89.jpg)
தரையில் மல்லாந்து படுத்து, முதலில் வலது காலை மடித்து, கைகளால் பிடித்து வயிற்றை நோக்கி இழுக்கவும். உங்கள் அடிவயிற்றில் மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவும்.
மெதுவாக பக்கவாட்டில் அசைக்கவும் அல்லது நீண்ட, குளிர்ச்சியான ஆழ்ந்த சுவாசத்துடன் நிலையாக இருக்கவும்.
வசதியாக இருந்தால், தலையை உயர்த்தி முட்டியை நோக்கி சிறிது நேரம் வைத்திருக்கலாம்.
பெருங்குடலில் சிக்கியுள்ள செரிமான வாயுவை வெளியேற்றுவது உள் வெப்பத்தைக் குறைக்கிறது, இது தெளிவையும் வசதியையும் மேம்படுத்துகிறது.
கோடைக்காலத்திற்கான யோகா குறிப்புகள்:
சந்திர பேதி பிராணாயாமம்: வலது நாசியை மூடிக்கொண்டு இடது நாசி வழியாக உள்ளிழுக்கவும், பின்னர் பிடியை தளர்த்தி இடது நாசியை மூடிக்கொண்டு வலது நாசி வழியாக வெளியேற்றவும். இது அமைதியான மற்றும் குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளது.
சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தின் போது உங்கள் ஆசனங்களைச் செய்யுங்கள். வெப்பம் அதிகமாக இருக்கும் மதிய நேரங்களைத் தவிர்க்கவும்.
Read in English: How yoga asanas can keep you cool despite the summer heat