வீக்கத்தை வெல்வதற்காகநாள்பட்ட முதுகுவலியைப் போக்குவதற்காக அல்லது கவலையான மனதை அமைதிப்படுத்துவதற்காக என யோகா செய்வதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்தவகையில் உங்கள் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவும் சில யோகா போஸ்கள் இங்கே உள்ளன.
மர்ஜரி ஆசனம்
இந்த போஸ் உங்கள் இடுப்பு, முதுகெலும்பு, வயிறு மற்றும் மார்புக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த ரத்தத்தை அனுப்புகிறது.
குறிப்பு: மணிக்கட்டு மற்றும் முட்டியில் தீவிர வலி உள்ளவர்கள் மற்றும் தீவிர முதுகு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். தீவிர கழுத்து வலி உள்ளவர்கள் கழுத்தை நேராக வைத்து பயிலவும்.
வைர போஸ் அல்லது வஜ்ராசனம்
இது உங்கள் இடுப்பை தளர்த்தி உயவூட்டுகிறது. இடுப்பு வலி மற்றும் வலி மிகுந்த உடலுறவு நிலை உள்ள பெண்களுக்கு இது மிகவும் முக்கியமான தோரணையாகும்.
உங்களுக்கு முழங்கால் வலி இருந்தாலோ அல்லது முழங்கால் அறுவை சிகிச்சை செய்து இருந்தாலோ வஜ்ராசனம் செய்வதை தவிருங்கள்.குடலிறக்கம் மற்றும் குடல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் யோகா பயிற்சியாளரின் உதவியுடன் வஜ்ராசனம் செய்வது நல்லது.
ஸ்லிப் டிஸ்க் போன்ற முதுகு தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள், விறைப்பு அல்லது கால், கணுக்கால் மற்றும் முழங்கால்களில் வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
புஜங்காசனம்
முதுகுப் பகுதியை நன்கு உறுதியாக வைத்துக் கொள்வதற்கு மிகவும் ஏற்றது புஜங்காசனம்.
புஜங்காசனத்தின் போது மார்பு நன்கு அகன்று இருப்பதால் ஆழ்ந்த சுவாசம் நடக்கிறது. ரத்தத்துக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது. வயிறு பகுதியில் உள்ள தேவையற்ற சதைகள் குறைகின்றன. இந்த ஆசனம் செய்வதால் செரிமானக் கோளாறுகள் சரியாகின்றன.
கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. அதிகப்படியான முதுகு வலி, கழுத்து வலி, ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“