அதிகாலை 2 - 3 மணி... சீக்கிரம் கருத்தரிக்க இந்த நேரத்தில் உடலுறவு வைக்கலாம்: டாக்டர் குரு
தம்பதியர்கள் எந்த நேரத்தில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பது பற்றி தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். இதுபற்றி இந்தப் பதிவில் மருத்துவர் குரு கூறிய தகவல்களைப் பற்றி காணலாம்.
தம்பதியர்கள் எந்த நேரத்தில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பது பற்றி தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். இதுபற்றி இந்தப் பதிவில் மருத்துவர் குரு கூறிய தகவல்களைப் பற்றி காணலாம்.
அதிகாலை 2 - 3 மணி... சீக்கிரம் கருத்தரிக்க இந்த நேரத்தில் உடலுறவு வைக்கலாம்: டாக்டர் குரு
தாம்பத்திய உறவு என்றாலே அது இரவுகளைப் பரிபூரணமாக்கும் அன்புக் கொண்டாட்டம்தான். அதே நேரம், `இரவும் இருளும்' தாம்பத்திய உறவுக்கான அவசியத் தேவைகளில் ஒன்றா? பகல் பொழுதுகளில் உறவுகொள்ளக் கூடாதா? பொழுதுகளுக்கும் தாம்பத்திய உறவின் மகிழ்ச்சிக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? இரவில் உறவுகொண்டால் சீக்கிரம் கருத்தரிக்குமா என்பது போன்ற கேள்விகளும் நம்மிடையே ஏராளம் இருக்கின்றன. இதுதொடர்பாக சித்த மருத்துவர் குரு கூறிய தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
Advertisment
புதிதாக திருமணமானவர்களுக்கு நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கும். 6 மாதத்தில் கன்சீவ் ஆகவில்லை என்றால், எந்த நேரத்தில் உடலுறவு வைத்தால் கன்சீவ் ஆக முடியும் என்று சந்தேகம் இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய் ஆரம்பித்து 14 நாளில் 4 நாட்கள் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் குரு. மாதவிடாய் ஆரம்பித்து 14 வது நாளில் பெண்களுக்கு ஒரு வித வலி இருக்கும். அந்த டைம்தான் முட்டை ரிலீஸ் ஆகும். அப்போது உடலுறவு வைத்தால், நன்றாக இருக்கும். சாந்தி முகூர்த்தம் கூட நம் முன்னோர்கள் விடியற்காலைல 2 முதல் 3 மணிக்குள் வைப்பார்கள். அப்போதுதான் ஆண்களுக்கு டெஸ்ரோஸ்டோன் ஹார்மோர்ன் உச்சத்தில் இருக்கும்போது விறைப்புத்தன்மை, விந்தணுக்கள் அதிகளவில் இருக்கும். எனவே, இரவில் 11 முதல் அதிகாலை 3 மணி வரை உடலுறவு கொள்ளும்போது இருவருக்குமே திருப்தி ஏற்படுவதுடன், விரைவில் கர்ப்பம் தரிக்கும் என்கிறார் மருத்துவர் குரு.
எந்த பொசிஷன் பெஸ்ட்:
பொதுவாகவே இயற்கையான கர்ப்பம் தரிப்பதற்கு எளிதான பொசிஷன் பெண் கீழே இருக்க வேண்டும். ஆண் மேலே இருக்க வேண்டும். பெண் மேலே இருக்கும்போது திருப்தி அடைவார்கள். ஆனால், கர்ப்பம் தரிப்பதற்கு வாய்ப்பு மிக குறைவு என்று எச்சரிக்கிறார் மருத்துவர் குரு. உடலுறவு செய்தவுடன் பெண்கள் பலர் சுத்தம் செய்வது தவறு என்றும், உடலுறவு செய்து முடித்தவுடன் ஒரு 2 நிமிடங்களில் அப்படியே இருப்பது நல்லது. அதனால விந்தணுக்கள் முழுமையாக உள்ளே என்றும் கூறுகிறார் மருத்துவர் குரு.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.