கலர் துணியில் ஒட்டிய சாயத்தை ஈஸியா நீக்கலாம்… இந்த டிரிக் டிரை பண்ணுங்க!

சாயக் கறை படிந்த துணிகளை எளிதில் கறை எப்படி நீக்குவது? என்பது பற்றி ஆஸ்க் ஜான்சி என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எளிய டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

சாயக் கறை படிந்த துணிகளை எளிதில் கறை எப்படி நீக்குவது? என்பது பற்றி ஆஸ்க் ஜான்சி என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எளிய டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

author-image
WebDesk
New Update
 fabric Try this trick

கலர் துணியில் ஒட்டிய சாயத்தை ஈஸியா நீக்கலாம்… இந்த டிரிக் டிரை பண்ணுங்க!

இந்த துணிகளைத் துவைப்பது எப்போதுமே கொஞ்சம் கடுப்பான வேலை தான். இதில் சாயம் போகும் துணி, சாயம் போகாத துணி என தனித் தனியாகப் பிரித்துதான் துவைக்க வேண்டியிருக்கும். அப்படி பார்த்து பார்த்து செய்தாலுமே கூட, சில நேரங்களில் துணிகளில் சாயம் படிந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு வீணாகி விடும். அந்த சாயக் கறைகளை எளிதில் எப்படி நீக்குவது? என்பது பற்றி ஆஸ்க் ஜான்சி என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எளிய டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

Advertisment

கலர் சட்டையில வெள்ளை சட்டை கூட சேர்த்து ஊற வைக்கும்போது வெள்ளை சட்டையிலயும் சாயம் ஒட்டும். ஒரு பக்கெட்டில் கால் பாக்கெட் அளவுக்கு சலவை பவுடர் சேர்த்து, அதனுடன் அரை மூடி வினிகர் சேர்க்க வேண்டும். 3 மடங்கு தண்ணி சேர்க்க வேண்டும். நல்லா நுரை வர அளவுக்கு மிக்ஸ் பண்ணி விடுங்க. சாயம் பிடித்த சட்டையை இதில் அரை மணி நேரம் போல நல்லா ஊற வச்சிரலாம். ஊறினதும் அதுக்கப்புறம் துவைக்கலாம். துவைக்கும்போது எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு பிரஷ் போட்டு கையில அடிச்சு நல்லா துவைங்க. அப்பதான் இந்த சாயம் எல்லாம் போகும். சட்டையில ஒட்டின சாயம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா போகும். துணிக்கு வந்து எந்த பாதிப்பும் வராது. ஆனா அதுல உள்ள சாயம் மட்டும் போயிடும். சாதாரணமா தண்ணி ஊத்தி அலசி எடுத்துக்கலாம். ஒரு 3 தடவை அலசி எடுத்துக்கோங்க. அலசிட்டு, வெயில்ல காய வச்சிடுங்க. இந்த மாதிரி அலசி காய வச்சு எடுத்துக்கலாம். இப்ப பாருங்க, அந்த சட்டை பொழிவாக மாறும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: