சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் நம் மண்டையில் ஸ்ட்ரா போட்டு ஒட்டுமொத்த சக்தியையும் உறுஞ்சுவிடுகிறது. வெளியே சென்று வீடு திரும்பினால், வீட்டிற்குள்ளும் சூரியனின் வெப்பத்தை நம்மால் உணர முடிகிறது. எல்லோராலும், எல்லா நேரங்களிலும் ஏசி (AC) மற்றும் ஏர் கூலர் (Air cooler) போன்ற சாதனங்களை பயன்படுத்த முடியாது. இது மின் கட்டணத்தை கண்டபடி உயர்த்திவிடும். மின்சார கட்டணம் உயராமல், உங்கள் வீட்டு அறையை சாமர்த்தியாமாக குளிர்விக்க சில தந்திரங்கள் உள்ளன. அதை எப்படி செய்வதென்றுதான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
இந்த கோடை கால வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். இயற்கையான முறையுடன் கொஞ்சம் ஸ்மார்ட்டான தந்திரங்களை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம், உங்கள் வீட்டு அறையில் தேங்கிக்கிடக்கும் வெப்பத்தையும், வெப்ப காற்றையும் உங்களால் குறைக்க முடியும். தினசரி ஏசி மற்றும் ஏர் கூலர் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மின்சாரம் கட்டணம் அதிகரிப்பதையும் உங்களால் இப்போது குறைக்க முடியும். இந்த டிரிக் ishebenas family என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்முறை: ஏசி இல்லாமல் உங்கள் வீட்டைக் குளிர்விக்க, ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். நல்ல வாசனைக்காக துணி வாசனை திரவம் கம்போர்ட் சிறிதளவு சேர்க்கவும். ஒரு பஞ்சை எடுத்து அதனை நடுபாதியாக வெட்டவும். பஞ்சுத் துண்டுகளைத் தண்ணீரில் நனைத்து, அவை திரவத்தை உறிஞ்ச விட வேண்டும். ஈரமான பஞ்சுகளை இரவு முழுவதும் பிரீசரில் வைக்கவும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் டப்பா எடுத்து அதன் பக்கங்களில் இரு துளையிட வேண்டும். அந்த துளைகளின் வழியாக ஒரு கயிற்றை நுழைத்து, அதனுள்ளே பிரீஸ் செய்யப்பட்ட பஞ்சுகளை வைத்து கட்டி, டேபிள் மின்விசிறியின் பின்புறம் தொங்கவிடவும். அறையை மூடவும், அரை மணி நேரத்திற்குப் பிறகு, அறை குளிர்ச்சியாகும்.
https://youtu.be/F8SPqXoDOB4