மறைந்த நடிகை ஸ்ரீதேவி சென்னையில் ஒரு வீடு வாங்கி இருந்தார். இந்த வீட்டுக்கு ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தார்.
இந்த பிரமாண்ட மாளிகையில் தற்போது நீங்கள் வசிக்கலாம். ஆம். இந்த வீடு ஏர்பிஎன்பி (Airbnb)யின் 11 ஐகான்கள் பட்டியலில் இணைத்துள்ளது.
இந்த வீட்டில் தங்கும் நபர்களுக்கு தென்னிந்திய உணவுகள் வழங்கப்படும். இந்த நிலையில், “இது பாலிவுட்டில் மிகவும் பிரபலமான குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானது ஆகும்” என Airbnb தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் பிரையன் செஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்தப் பட்டியலில், நியூ மெக்சிகோவின் அபிகியூவில் உள்ள டிஸ்னி-பிக்சர்ஸ் அப் (2009), நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டர் கவுண்டியில் உள்ள எக்ஸ்-மென் மாளிகை, கெவின் ஹார்ட்டின் உறுப்பினர்கள்-மட்டும் கோராமினோ லைவ் லவுஞ்ச், ஒரு தனிப்பட்ட டோஜா கேட் கச்சேரி, மினியாபோலிஸ், மினசோடபோலிஸில் உள்ள பிரின்ஸின் சின்னமான பர்பிள் ரெயின் ஹவுஸ் மற்றும் இன்சைட் அவுட் தலைமையகம் ஆகியவை அடங்கும்.
ஸ்ரீதேவி கனவு மாளிகை
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்த பிறகு முதன் முதலில் ஸ்ரீதேவி இந்த மாளிகையை வாங்கினார்.
இந்த வீட்டில் பல்வேறு கலைப் பொருள்கள் வாங்கி அடுக்கப்பட்டுள்ளளன. இதற்கிடையில் பராமரிப்பு காரணமாக இந்த மாளிகை மூடப்பட்டது.
இருப்பினும், 2018 இல் ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு, அந்த மாளிகையை புதுப்பிக்கும் பணியை போனி ஏற்றுக்கொண்டார். 2022 ஆம் ஆண்டு வோக் இந்தியா நிகழ்ச்சியில் ஜான்வி இங்கு கலந்துகொண்டார்.
இந்த மாளிகையில் போனியின் சென்னை அலுவலகமும் உள்ளது. ஓவியங்கள் மற்றும் ஸ்ரீதேவி பயன்படுத்த பெட்ரூம் மற்றும் இரகசிய அறைகளும் உள்ளன.
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அடுத்து மிஸ்டர் & மிஸஸ் மஹி மற்றும் உலஜ் ஆகிய படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் தேவாரா: பாகம் 1 படத்தின் மூலம் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“