சாயம் ஒட்டிய துணிகளை சட்டுனு க்ளீன் பண்ணலாம்… வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்கள் போதும்!
ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு ஸ்பூன் வினிகர் கொண்டு துணிகளில் ஒட்டியுள்ள சாயத்தை எளிதாக அகற்றும் முறையை இப்பதிவில் காணலாம். இதனை பின்பற்றுவதன் மூலம் நம் துணிகளை மீண்டும் புதியது போன்று மாற்றிவிட முடியும்.

பெரும்பாலும் துணி துவைக்கும் போது நாம் கவனமாக இருந்தாலும், அவ்வப்போது மற்ற துணிகளில் உள்ள சாயம் ஒட்டிக் கொள்ளும். இது போன்ற சாயத்தை அகற்ற சில வழிமுறைகள் உண்டு. அதன்படி, ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கொண்டே துணிகளில் ஒட்டியுள்ள சாயத்தை எவ்வாறு எளிதாக அகற்றுவது என இப்பதிவில் நாம் காணலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பேக்கிங் சோடா (சமையல் சோடா) - 1 டீஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
தண்ணீர் (துணி மூழ்கும் அளவு)
துவைக்கும் சோப்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சாயம் ஒட்டிய துணி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டீஸ்பூன் வினிகர் கலந்து, சாயம் ஒட்டிய துணியை சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரைமணி நேரம் ஊறிய பின் துணியை வெளியே எடுத்து, சாயம் ஒட்டியுள்ள பகுதிகளில் சோப்பை போட்டு நன்றாகத் தேயுங்கள். லேசான துணியாக இருந்தால் கைகளால் மெதுவாகத் தேய்த்தாலே போதும். சற்று தடிமனான துணியாக இருந்தால், மென்மையான ஸ்க்ரப்பர் கொண்டு லேசாக தேய்க்கலாம். சோப்பு போட்டு தேய்த்த பிறகு, துணியை சுத்தமான தண்ணீரில் நன்றாக அலசி வழக்கம் போல் காய வையுங்கள். இந்த முறையில், உங்கள் துணிகளில் ஒட்டியுள்ள சாயம் நீங்கி, துணி பளிச்சென்று ஆகிவிடும். புதிய துணிகளில் சாயம் போக அதிக வாய்ப்புள்ளதால், அவற்றை மற்ற துணிகளுடன் சேர்த்து துவைப்பதைத் தவிர்ப்பது நல்லது.