வீட்டில் உணவு சமைப்பதற்கும் மருத்துவ குணங்களுக்கும் சில செடிகள் கட்டாயம் தேவைப்படும். அதில் முக்கியமாக இந்த 5 செடிகளை வீட்டில் சிறிய இடத்தில் கூட வளர்க்கலாம். அது என்னென்ன என்பதை பார்க்கலாம்.
கற்பூரவல்லி: கற்பூரவல்லி பொதுவாக ஒரு கிருமி நாசினியாகவும், காய்ச்சல், சளி, தலை வலிக்கு அருமருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகளில் பஜ்ஜி தயார் செய்யலாம். ரசம் வைக்கலாம். மேலும், கஷாயம் செய்து பருகி வரலாம். எனவே இதனை வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டும்.
புதினா: வீட்டில் எளிதாக வளர்க்க கூடிய மூலிகை செடிகளில் இதுவும் ஒன்று. அதி வேகமாக வளரக்கூடிய புதினா இலைகள், காரம் மற்றும் இனிப்பு உணவுகளை செய்ய பயன்படுத்தபடுகிறது. சாதாரணமாக புதினா தண்டை நட்டு வைத்தாலே போதும் கூட்டமாக அதிகமாக வளரும்.
கற்றாழை: கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது தோல் பராமரிப்பு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கற்றாழை காற்றை சுத்திகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே இதனை வீட்டில் வளர்த்தால் மாசுக்களை உறிஞ்சி சுத்தமான சூழலை உருவாக்குகிறது. மேலும் காற்றின் தரம் மேம்படுவதால், சுவாச நோய்களின் ஆபத்தும் குறையும்.
கறிவேப்பிலை: சமையலுக்கு அதிகம் உதவும் கருவேப்பிலை செடி பொதுவாக எல்லார் வீட்டிலும் கண்டிப்பாக இருக்க கூடிய செடிகளில்வ்முக்கியமான ஒன்றாகும். இதனை வீட்டின் அருகாமையில் பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் வளர்க்கலாம்.
துளசி செடி: இத்தாலியன் உணவுகள் செய்வதற்கு துளசி இலைகளை அதிகம் உபயோகிப்பார்கள். இந்தியாவில் இருமல், சளி போன்றவற்றிக்கு அதிக மக்கள் இதை மூலிகையாக எடுத்துக்கொள்கிறார்கள். கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டிய மூலிகை செடிகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த 5 செடிகளை கட்டாயம் வீட்டில் வளர்ப்பதன் மூலம் அடிக்கடி உண்டாகும் சளி, இருமல், வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். மேலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டும். 5 செடிகளும் மருத்துவ பயன்கள் நிறைந்ததுடன் கருவேப்பிலை, புதினா சமையலுக்கும் பயன்படும் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வர முடி வளர்ச்சி, ஊட்டச்சத்து பிரச்சனைகளை தடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.