இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் சரா (Zara) ஃபேஷன் வணிக இணையத்தளத்தில், லுங்கி சுமார் 6,000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனை நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் ஆண்கள் இயல்பாக அணியும் ஆடை லுங்கி. இந்தியாவில் பெரும்பாலும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலேயே லுங்கி ஆடை பெரிதும் விரும்பி அணியப்படுகிறது. ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில், இடம்பெற்ற லுங்கி டான்ஸ் பாடல் மூலம் வட மாநிலங்களிலும் இந்த ஆடை பிரபலமானது. அவ்வப்போது விளம்பரங்களிலும் கிரிக்கெட் வீரர்கள், குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் லுங்கியுடன் தோன்றுவர்.
இந்நிலையில், லுங்கியை பெண்கள் அணியும் பாவாடை போன்று மாற்றி, 69.99 (சுமார் 6,200 ரூபாய்) பவுண்ட்ஸ்க்கு விற்பனை செய்துவருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/zara-lungi-242x300.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/01/zara-lungi-2-242x300.jpg)