Advertisment

சிங்கிள் மதர்.. மகனுக்காக எதையும் கடந்து வாழும் ஜி தமிழ் மகேஷ்வரி!

சகோதரியின் காதலனை திருமணம் செய்து கொள்ள நேரிடுவதாக கதை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
zee tamil maheswari instagram vj maheswari chanakyan

zee tamil maheswari instagram vj maheswari chanakyan

zee tamil maheswari instagram vj maheswari chanakyan : தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை, சினிமா நடிகை என தன் கரியரில் அடுத்தடுத்த வளர்ச்சியைப் பெற்றவர் வி.ஜே.மகேஸ்வரி.

Advertisment

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், சன் மியூஸிக்கில் தொகுப்பாளினியாக தனது கரியரை தொடங்கினார். பின்னர் இசையருவியில் தனது பணியை தொடர்ந்தார். அப்படியே சினிமாவிலும் அறிமுகமாகி, சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களில் நடித்து வந்த மகேஸ்வரி, திருமணமான காரணத்தினால் தனது கரியருக்கு சற்று பிரேக் கொடுத்தார்

குடும்பம், குழந்தை என சில காலம் நேரத்தை செலவிட்டவர், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’தாயுமானவன்’, ‘புதுக்கவிதை’ ஆகிய சீரியல்களில் நடித்தார். மனைவியை இழந்த தந்தையையும் அவரது ஐந்து மகள்களையும் சுற்றி வரும் கதை தான் தாயுமானவன். அந்த 5 மகள்களில் ஒருவராக மஹா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மகேஸ்வரி. இன்னசெண்ட் மற்றும் இனிமையான பெண்ணான அவர் தனது சகோதரியின் காதலனை திருமணம் செய்து கொள்ள நேரிடுவதாக கதை அமைந்திருந்தது. காதல் கதையான புதுக்கவிதை சீரியலில், காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மகேஸ்வரி.

தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கமல் ஹாசன், சிம்ரன் இருவரும் தான் ஃபேவரிட் நடிகர்களாம். அதோடு சிவப்பு, வெள்ளை நிற உடைகளை விரும்பி அணிவாராம். தென்னிந்திய உணவுகளை விரும்பி உண்ணும் மகேஸ்வரி, ஷூட் இல்லாத நாட்களில் தனது மகனுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment