’குண்டா படச்ச கடவுளுக்கு நன்றி சொன்னேன்’ : ’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ அஸ்வினி
Oru Oorla Oru Rajakumari : கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சியான “ஃபேமிலி பவர்” எனும் நிகழ்ச்சியில், தனது குடும்பத்துடன் போட்டியாளராக கலந்துக் கொண்டார் அஸ்வினி.
Oru Oorla Oru Rajakumari : கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சியான “ஃபேமிலி பவர்” எனும் நிகழ்ச்சியில், தனது குடும்பத்துடன் போட்டியாளராக கலந்துக் கொண்டார் அஸ்வினி.
Ashwini : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.30-க்கு ஒளிபரப்பாகி வந்த தொடர், ’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’. அந்த சீரியலில் நடுத்தர வயதுத் தோற்றத்தில் நடித்த அஸ்வினியின் வயது வெறும் 27 தான். உடல் பருமனாக இருந்ததால் பெரியவர் போல தெரிந்தார்.
பெங்களூருவில் பிறந்து வளர்ந்த அஸ்வினி, அங்குள்ள பெங்களூரு பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து இளங்கலை பட்டம் பெற்றவர். பின்னர் பெங்களூரிலுள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்துக் கொண்டிருந்தார். இதற்கிடையே தனது நீண்டகால நண்பர் மிதுனை 2013-ல் பெங்களூரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அவரும் ஒரு மென்பொருள் பொறியாளர் தான். கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சியான “ஃபேமிலி பவர்” எனும் நிகழ்ச்சியில், தனது குடும்பத்துடன் போட்டியாளராக கலந்துக் கொண்டார் அஸ்வினி. இதனை நடிகர் புனித் ராஜ் கலர்ஸ் கன்னடம் சேனலில் தொகுத்து வழங்கினார்.
Advertisment
Advertisements
அந்த ஷோ-வில் அஸ்வினியைப் பார்த்து விட்டு தான், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ தொடருக்கு நடிக்கக் கேட்டார்களாம். குண்டா இருக்கிற ஒரு பொண்ணு வேண்டுமென தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு அஸ்வினி கச்சிதமாக தெரிந்தாராம். இதைக் கேட்ட அஸ்வினி, தன்னை உடல் பருமனாக படைத்த கடவுளுக்கு அப்போது நன்றி தெரிவித்தாராம்.
அஸ்வினி
இது குறித்து ஒரு நேர்க்காணலில் பேசிய அஸ்வினி, ”எங்க வீட்டுல கூட காமெடி பண்ணி இன்னும் அசிங்கப்படுத்திடுவாங்களோனு பயந்தாங்க. சீரியல் கதையைக் கேட்டதும், ஃபன் இருந்தாலும், சீரியஸான சப்ஜெக்ட்னு புரிஞ்சது. என்னை மாதிரி ஒரு ஆள கண்டுப்பிடிக்க, இந்த சீரியல் டீம் மெனக்கெட்டு அலைஞ்சதையும், ரொம்ப நாளா காத்திருந்ததையும் நினைச்சப்போ, தமிழ் மக்களோட சீரியல் பிரியம் புரிஞ்சது” என்றார்.
அஸ்வினிக்கு குடும்பத்துடன் நேரம் செலவிடுவதிலும், பயணம் மற்றும் இசை கேட்பதிலும் தான் ஆர்வம் அதிகமாம். உணவு என்றால் சைனீஸ் மற்றும் இத்தாலியன் உணவுகளை ஒரு கை பார்த்து விடுவாராம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”