zee tamil serial news: மலையாளத்தில் பிளவர்ஸ் டிவியில் ஒளிபரப்பான ‘மஞ்சுருக்கும் காலம்’’ சீரியலில் ‘ஜானிக்குட்டி’ என்ற கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.
zee tamil serial news: மலையாளத்தில் பிளவர்ஸ் டிவியில் ஒளிபரப்பான ‘மஞ்சுருக்கும் காலம்’’ சீரியலில் ‘ஜானிக்குட்டி’ என்ற கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் இளம் ரசிகர்களை கவர்ந்துள்ள சீரியல் சூர்யவம்சம். இந்த தொடரில் நாயகியாக நடித்து வருபவர் சமந்தா. இவரது நிஜப் பெயர் நிகிதா ராஜேஷ். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். இவரது தந்தை மலையாள சீரியல் டைரக்டர் மற்றும் தாய் வனத்துறையில் பணியாற்றுகிறார். நிகிதா திருவனந்தபுரம் வட்டியூர்க்காவுவில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் படித்தார். இவர் தனது குழந்தை பருவத்திலேயே நடிக்க வந்துவிட்டார். தனது 3 வயதில் ஏஷியாநெட்டில் ஒளிபரப்பான மலையாள சீரியல் ‘‘ஓமணத்திங்கள் பக் ஷி.’’ தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதனை தொடர்ந்து ‘‘ரகசியம்’’, ‘‘தேவி மகாத்மியம்’’, ‘‘மஞ்சுருக்கும் காலம்’’ போன்ற மலையாள சீரியல்களில் நடித்தார்.
Advertisment
இந்த தொடர்களில் பிளவர்ஸ் டிவியில் ஒளிபரப்பான ‘மஞ்சுருக்கும் காலம்’’ சீரியலில் ‘ஜானிக்குட்டி’ என்ற கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். அந்த கேரக்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு டீனேஜ் வயதில் “ஜூனியர் சாணக்யன்” மலையாள சீரியலில் எண்ட்ரி கொடுத்தார். பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார். மழவில் மனோரமா டிவியில் ஒளிபரப்பான ‘உக்ரம் உஜ்வாலம்’ என்ற ரியாலிட்டி ஷோவின் 2வது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர்.
Advertisment
Advertisements
தமிழ் சின்னத்திரையில் இவர் முதலில் அறிமுகமானது சன்டிவியில்தான். அருந்ததி என்ற திகில் தொடரில் தெய்வானை என்ற கேரக்டரில் நடித்தார். இதுவும் மக்கள் மத்தியில் பிரபலமானது . தற்போது ஜீ தமிழின் சூர்யவம்சம் சீரியலில் சமந்தா என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார்.இதில் பூர்ணிமா பாக்யராஜ், ஆஷிஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனது மகள் கல்யாணி, ஒப்புதலுக்கு எதிராக திருமணம் செய்ததற்காக குடும்பத்திலிருந்து அவளை ஒதுக்கிவைக்கும் அன்னபூரணி பற்றிய கதை. 25 ஆண்டுகளுக்குப் பிறகு கல்யாணியின் மகள் சமந்தா தனது தாயை மீண்டும் குடும்பத்தில் இணைக்க முயற்சிக்கிறாள். இந்த தொடரில் சாம்(சமந்தா)மற்றும் சூர்யா இடையேயான காதல் அதிக ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது.
நிஜத்தில் கலகலப்பாக பேசும் நிகிதா ரொம்ப செண்டிமெண்ட் டைப். அவரது நட்பு மற்றும் உறவுகள் வட்டாரத்தில் ரொம்ப பாசக்கார பொண்ணு என்று பெயரெடுத்திருப்பவர். நிகிதாவுக்கு ஹோட்டலில் சாப்பிடுவது குறிப்பாக முகலாய உணவு வகைகள் மிகவும் பிடித்த ஒன்று. மம்முட்டி, கமல்ஹாசன், நயன்தாரா ஆகியோர் அவருடைய பேவரிட் ஸ்டார்ஸ். லேட்டஸ்ட் சினிமா பாடல்களை விரும்பி கேட்பாராம். ஸ்போர்ட்சில் சைக்கிளிங் பண்ணுவது பிடித்த ஒன்றாம்.
இவர் தீவிர அஜீத் ரசிகை. ஒரு தடவையாவது அஜித்தை நேரில் பார்க்க வேண்டும் என்பது இவரது விருப்பமாம். பெரியத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறார் நிகிதா ராஜேஷ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"