படித்தது இன்ஜினியரிங்.. மாடலிங் மூலம் சீரியல் என்ட்ரி.. கோகுலத்தில் சீதை வசுந்தரா லைஃப் ட்ராவல்!

Zee Tamil Actress: சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள வசுந்தரா சினிமா நடிகைகளுக்கு இணையாக ஏகப்பட்ட போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Zee Tamil Actress: சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள வசுந்தரா சினிமா நடிகைகளுக்கு இணையாக ஏகப்பட்ட போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
asha gowda

ஜீ தமிழின் "கோகுலத்தில் சீதை" என்ற ஹிட் சீரியலில் நடித்து வருபவர் வசுந்தரா. இவரது ஒர்ஜினல் பெயர் ஆஷா கவுடா. கர்நாடகாவை சேர்ந்தவர். பெங்களூருவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இன்ஜினியரிங் படித்துள்ள இவர் நடிப்பு மீதான ஆர்வத்தால் மாடலிங் செய்துகொண்டிருந்தார். பல விளம்பரங்களில் நடித்துள்ளார் ஆஷா. அப்போதுதான் கன்னட கலர்ஸ் சூப்பர் சேனலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சில சீரியல்களில் நடித்து கன்னடத்தில் பிரபலமானார். இதில் கிடைத்த பாப்புலாரிட்டி தமிழில் அறிமுகமானார்.

Advertisment
publive-image

தமிழ் சின்னத்திரையில் இவரது முதல் அறிமுகம் ஜீ தமிழ் சேனலில்தான். 2019ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீரியல் தொடரில் வசுந்தரா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஆஷாவுக்கு ஜோடியாக நந்தா மாஸ்டர் அர்ஜூன் கேரக்டரில் நடித்து வருகிறார். ஏழை பெண்ணான ஆஷா தனது குடும்பத்தை காப்பாற்ற கூடிய பொறுப்பில் உள்ளவராக நடிக்கிறார். அர்ஜூன் - வசுந்தரா இடையேயான காமெடி கலந்த காதல் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சீரியல் ஆரம்பித்து சில வாரங்களிலேயே நல்ல ரீச் ஆனது. தற்போது 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது கோகுலத்தில் சீதை.

publive-image

ஆஷாவின் மெயின் ஹாபி மியூசிக், டான்ஸ்தான். சோசியல் மீடியாவில் இவருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள வசுந்தரா சினிமா நடிகைகளுக்கு இணையாக ஏகப்பட்ட போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஷூட்டிங் ஸ்பார்ட் வீடியோக்கள், இன்ஸ்டா ரீல்ஸ் என ஆக்டிவாக இருக்கிறார்.

publive-image

கர்நாடகாவை சேர்ந்த ஆஷா தமிழ் பெண்ணை போல் சேலை கட்டி வெளியிடும் ஃபோட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. ஜீ தமிழ் குடும்ப விருது வழங்கும் விழாவில் விஜய் சேதுபதியின் கையால் விருது வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் வசுந்தரா.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Gokulathil Seethai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: