Advertisment

பல் மருத்துவர் டூ ஆக்டர்… நீதானே எந்தன் பொன்வசந்தம் அனு பர்சனல் ப்ரொஃபைல்!

சென்னையில் பல் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போது, இன்ஸ்டாவில் பதிவிட்ட போட்டோக்களை பார்த்து தேடி வந்தது தான் சீரியல் வாய்ப்பு.

author-image
WebDesk
Aug 03, 2021 18:36 IST
dharshana ashokan

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் நீதானே எந்தன் பொன்வசந்தம். இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் தர்ஷனா. குன்னூரில் பிறந்து வளர்ந்தவர். பல் மருத்துவம் படித்துள்ளார். சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது சில போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்புதான் நீ தானே என் பொன்வசந்தம் சீரியல். இவருடைய தந்தை அசோகனும் ஒரு மருத்துவர். சொந்தமாக கிளினிக் வைத்திருக்கும் அசோகன் தன்னுடைய ஆசைக்காக தான் தர்ஷனாவை மருத்துவம் படிக்க வைத்தாராம்.

Advertisment

ஆனால் தர்ஷனாவுக்கோ, மருத்துவம் படித்தாலும் அவருக்கு நடிப்பு மீது தான் ஆசையாம். அதனால் தான் படிப்பை முடித்ததும் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற கிளம்பி விட்டார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு தமிழக மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. 40 வயது ஆணுக்கும், 20 வயது பெண்ணுக்கும் இடையேயான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியலில், அனு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். கன்னடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற ‘ஜோதே ஜோதேயலி’ என்ற தொடரின் ரீமேக் தான் ’நீதானே எந்தன் பொன்வசந்தம்’ சீரியல்.

இந்த தொடரில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது 300 எபிசோடுகளை கடந்த வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த சீரியல். கல்லூரி மாணவியாக அனுவின் கேரடக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா-அனு காதல் காட்சிகளை ரசிக்கவே தனி பட்டாளமே உள்ளது. இவர் ஸ்கூல் படிக்கும்போதே ரசித்து பார்த்த சீரியல் என்றால் கனா காணும் காலங்கள் சீரியல் தானாம். தர்ஷனாவுக்கு மாடலிங் ஃபோட்டோஷூட் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார் அனு. சூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் செம ஜாலியாக கொண்டாடும் போட்டோக்களையும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Neethane Enthan Ponvasantham
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment