கனா காணும் காலங்கள் டூ சத்யா சீரியல் வில்லி.. நடிகை ஸ்ரீவித்யா லைஃப் ட்ராவல்!

Zee Tamil Actress: காஸ்டியூமிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்ரீவித்யா சீரியல்களில் உடுத்தியுள்ள சாரீஸ் பெண் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

srividya

சத்யா சீரியலில் வில்லியாக கலக்கி வருகிறார் அனிதா. இவரது நிஜப் பெயர் ஸ்ரீவித்யா நடராஜன். ஊட்டியை சேர்ந்த இவர் கோயம்புத்தூரில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். மீடியாவில் முதல் அறிமுகம் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள்தான். இதில் நடித்த பலருக்கும் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து நல்ல ரீச் ஆகியுள்ளனர். அந்த வரிசையில் ஸ்ரீவித்யாவும் ஒருவர். தொடர்ச்சியாக சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சன்டிவியில் சூப்பர் ஹிட் சீரியலான முந்தாணை முடிச்சு தொடரில் நடித்தார்.

தொடர்ந்து இளவரசி, அழகி, கலைஞர் டிவியில் மடிப்பாக்கம் மாதவன், பொதிகை டிவியில் நிழல், ஜெயா டிவியில் கைராசி குடும்பம் போன்ற பல சீரியல்களில் நடித்தார். இவரது தனித்துவமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கடந்தது. ஷாட் டைமில் ஏகப்பட்ட சீரியல்களில் கமிட் ஆகி நடித்து வந்தார். ஜீ தமிழின் யாரடி நீ மோகினி, கல்யாண பரிசு, கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது சத்யா சீரியல்தான். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் அனிதா என்ற நெகட்டிவ் கேரக்டரில் அசத்தி வருகிறார். இந்த தொடருக்கு பிறகு இவருக்கு ஃபேன்ஸ் கூட்டம் அதிகமாகியுள்ளது.

காஸ்டியூமிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்ரீவித்யா சீரியல்களில் உடுத்தியுள்ள சாரீஸ் பெண் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. ஸ்ரீவித்யாவிற்கு Half saree ரொம்பவும் பிடித்த உடை. எப்போதும் மியூசிக் கேட்பாராம். ஊர்சுற்றுவது பிடிக்கும். ஓரளவிற்கு தான் சமையல் தெரியும் என்றாலும் டேஸ்டியான ஃபுட் என்றால் ஒரு கை பார்த்துவிடுவாராம். இளையராஜா மியூசிக், எஸ்பிபி வாய்ஸ் இரண்டும் பிடித்தமான ஒன்று. சினிமா, சீரியல் எதுவாக இருந்தாலும் அதில் ஸ்ட்ராங் ரோலில் நடிக்க வேண்டும் என்பது இவரது விருப்பம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Zeetamil sathya serial anitha srividya biography

Next Story
உடல் எடை குறைய இந்த உணவுதான் காரணம் – வனிதா விஜயகுமார் டயட் டிப்ஸ்!Vanitha Vijayakumar Weight Loss Tips Diet Plan Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com