நியூஸ் ரீடர் டூ ஆக்டர்… திருமதி ஹிட்லர் அர்ச்சனா பர்சனல் ப்ரொஃபைல்

zeetamil serial actress: தான் straight forward ஆக இருந்ததாலேயே கன்னட சின்னத்திரையில் பல சீரியல் வாய்ப்புகளை இழந்துள்ளதாக கூறியுள்ளார் திருமதி ஹிட்லர் சீரியல் நடிகை சௌமியா ராவ்.

sowmiya rao

திருமதி ஹிட்லர் சீரியலில் முதல் மருமகளாக கேரக்டரில் நடித்து வருபவர் அர்ச்சனா. இவரது நிஜப்பெயர் சௌமியா ராவ் நாடிக். கர்நாடகாவை சேர்ந்தவர். டபுள் எம்ஏ முடித்துள்ளார். கன்னட செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக தன் பணியை தொடங்கியுள்ளார். கன்னட மீடியாவில் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளரும் கூட. நடிப்பு மீதான ஆர்வத்தில் கன்னட சின்னத்திரைக்குள் நுழைந்துள்ளார். முதல் சீரியலிலேயே செவிலியராக நடித்துள்ளார். தொடர்ந்து சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழில் அறிமுகமானார். சன்டிவியின் வள்ளி சீரியிலில் கோஸ்ட் கேரக்டரில் உமா மகேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கேரக்டருக்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து பல சீரியல் வாய்ப்புகள் வந்தாலும் நல்ல ரோல்க்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் விஜய் டிவியின் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் சத்தியா வாக நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். இந்த தொடர் மூலம் ஏராளமான தமிழ் பேன்ஸ்களை தன் பக்கம் ஈர்த்தார். அதில் அம்ரித் நாயகனாக நடித்திருப்பார். பின்னர் சன்டிவியின் ரோஜா சீரியலில் சாக்ஷியாக நடித்தார். தமிழ், கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வந்தார். சௌமியாவிற்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த். மூன்று மொழிகளில் சீரியல்களில் நடித்திருந்தாலும் தமிழ்தான் இவருக்கு மிகவும் பிடித்துள்ளதாம். ஆரம்பத்தில் தமிழ் சீரியலுக்குள் என்ட்ரி ஆகும் போது சுத்தமாக தமிழ் தெரியாமல் இருந்துள்ளார். அதன்பிறகு பல புத்தகங்கள் படித்தும் சக ஆர்டிஸ்டுடன் பேசியும் தமிழ் கற்றுக்கொண்டுள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் ஒரு வருடம் வேலை இல்லாமல் கர்நாடகாவில் இருந்துள்ளார். அதன்பிறகுதான் திருமதி ஹிட்லர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்ற கதைகளில் இருந்து சற்றே வித்தியாசமாக கதை இருந்ததால் உடனே ஓகே சொல்லி நடிக்க தொடங்கியுள்ளார். அந்த சீரியல்களில் மூன்று மருமகள்களில் ஒருவராக நடித்து வருகிறார். இதிலும் ஓரளவிற்கு நெகட்டிவ் ரோல்தான். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள சௌமியா அவ்வபோது ஃபோட்டோஷூட், டப்ஸ்மேஷ் என பதிவிட்டு வருகிறார்.

சௌமியா ரொம்பவே straight forward. இதனாலேயே கன்னட சின்னத்திரையில் பல வாய்ப்புகளை இழந்துள்ளார். சீரியலுக்கு வந்த பிறகு ஆன்கரிங் ரொம்ப மிஸ் பன்னுகிறாராம். வித்யாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் சௌமியாவுக்கு வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Zeetamil serial actress thirumathi hitler archana sowmiya rao biography

Next Story
பரோட்டா, சப்பாத்தி, குஸ்காவுக்கு பொருத்தமான “எம்ட்டி சால்னா”… இப்படி செஞ்சு அசத்துங்க
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com