ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் என்றென்றும் புன்னகை. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரின் நாயகி தென்றல். இவரது நிஜப்பெயர் நக்ஷத்திரா ஸ்ரீனிவாசஸ். இவருக்கு அஞ்சனா என்ற பெயரும் உண்டு. பெங்களூருவை சேர்ந்தவர். கல்லூரி படித்துக்கொண்டிருந்தபோதே சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கன்னடத்தில் முதன் முதலில் கிருஷ்ணா ருக்மணி என்ற தொடரில் ருக்மணியாக அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கில் ஒளிபரப்பான கோரந்த தீபம் என்ற தொடரில் நடித்தார்.
அதன்பிறகு புன்னகா என்ற தெலுங்கு சீரியலில் நடித்து மிகவும் பாப்புலரானார். இந்த தொடருக்கு பிறகு நக்ஷத்திராவுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். இதன் மூலம் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. Chethilo Cheyyesi Cheppu Bava என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் இவர் அறிமுகமானது சன்டிவியில்தான். மாயா என்ற தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்து நல்ல ரீச் ஆனார். இவர் தெலுங்கில் புராண வகை கதை ஒன்றில் நடித்ததை பார்த்துதான் மாயா சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான சிவகாமி என்ற சீரியலில் ஐபிஎஸ் ஆக நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். தற்போது ஜீ தமிழின் என்றென்றும் புன்னகை சீரியலில் ஆர்ஜேவாக நடித்து வருகிறார். இந்த தொடரிலும் இவரின் தென்றல் கேரக்டருக்கு ரசிகர்கள் அதிகம். 250க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த சீரியல்.
நக்ஷத்திரா திரைத்துறைக்கு வந்த 9 வருடங்கள் ஆகிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் ஏராளமான சீரியல்களிலும், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். அம்மன் கெட்டப்பில் ஒரு நல்ல சீரியலில் நடிக்க வேண்டும் என்பது இவரது ஆசை. நடிப்பை விட டான்ஸ் மேல்தான் ரொம்ப ஆர்வம் அதிகமாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது மார்டன் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். தமிழ் திரைப்படங்களிலும் சான்ஸ் கிடைத்தால் நடிக்க ஆர்வமாக உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil