ஜீ தமிழின் என்றென்றும் புன்னகை சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை கவிதா. 1976-1980 களில் புகழ்பெற்ற சினிமா நடிகை. இவரது பூர்வீகம் ஆந்திரா. ஆறு வயதில் சென்னைக்கு ஷிஃப்ட் ஆகியுள்ளார். தனது 11 வயதில் 'ஓ மஞ்சு' என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகனார் கவிதா. இந்த படம் 1976ல் வெளியானது. தொடர்ந்து ஆட்டுக்கார அலமேலு, ரவுடி ராக்கம்மா, காலமடி காலம், அவள் தந்த உறவு, ஆளுக்கொரு ஆசை என தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இரண்டு கன்னடம் மற்றும் ஒரு தெலுங்குப் படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளார்.
Advertisment
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என அப்போதைய முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்தவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாண்டவர் பூமி படத்தில் நடித்தார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்தியாவின் நான்கு மொழிகளில் 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். கடைசியாக நாரதன் என்ற தமிழ் படத்தில் நடித்தார். 1976 முதல் 1984 வரை முன்னணி கதாநாயகியாக திரைத்துறையில் வலம் வந்தவர். 1991 முதல் தற்போது வரை பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இவருக்கு அரசியலில் ஈடுபாடு அதிகம். படங்களில் நடிப்பதை குறைத்தவர் இவர் அதிரடியாக ஆந்திர அரசியலில் நுழைந்தார்.
2008ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். சந்திரபாபு நாயுடு ஜெயித்ததும் தனக்கு முக்கியத்துவம் தராததால் கட்சியில் இருந்து விலகினார். அதன்பிறகு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து ஆக்டிவா வொர்க் பண்ணியுள்ளார். சினிமா, அரசியல் என பிசியாக இருந்தவர் 2014ல் சின்னத்திரை பக்கம் வந்தார். முதன் முதலில் ஜீ தெலுங்கில் மூக மனசுலு என்ற சீரியலில் நடித்தார். அதை தொடர்ந்து 2018ல் சன்டிவியின் கங்கா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தார். தொடர்ந்து நந்தினி தொடரில் நடித்தார். நந்தினி சீசன் 2 கன்னட மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இவரே நடித்தார்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்றென்றும் புன்னகை சீரியலில் நடித்து வருகிறார். ஆண்டாள் என்ற கேரக்டரில் வில்லியாக பயங்கர வில்லத்தனம் செய்து வருகிறார். இவரது காஸ்யூம்கே தனி ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பு அதிக ரசிகர்களை பெற்று தந்துள்ளது. தெலுங்கில் Oohalu Gusasalade என்ற சீரியலிலும் தற்போது நடித்து வருகிறார். ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2020ல் Contribution to Cinema & Series பிரிவில் விருது வென்றார். சினிமா, அரசியல், சீரியல் என திரையுலகில் நீண்ட பயணத்தை மேற்கொண்டு வரும் கவிதாவிற்கு வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மா வேடத்தில் நடிக்க ஆசையாம். மீண்டும் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil