மாடல், மேக்கப் ஆர்டிஸ்ட், சீரியல் வில்லி… கோகுலத்தில் சீதை இனியா பர்சனல் ப்ரொஃபைல்!

முதன்முதலில் 2018ல் வெளியான காலம் என்ற ஷார்ட் பிலிமில் நடிகை வினிதா ஜெகநாதன் அறிமுகமானார்.

vinitha jaganathan

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை என்ற தொடரில் நடித்து வருபவர் இனியா. இவரது நிஜப்பெயர் வினிதா ஜெகநாதன். தமிழகத்தின் வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர். ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் படிப்பை முடித்தவர் நேபாலில் உள்ள மனிபால் காலேஜ் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் என்ற தனியார் கல்லூரியில் மெடிக்கல் சயின்ஸ் படித்துள்ளார். பிறகு அதே கல்லூரியில் சில மாதங்கள் வேலை பார்த்து வந்தவர் நடிப்பு மீதான ஆர்வத்தில் மாடலிங் துறையில் என்ட்ரி ஆனார்.

பல விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு மேக் அப் ஆர்டிஸ்ட்டும் கூட. வினிதா ஆரம்பத்தில் குறும்படங்கள் மூலம் அறிமுகமானார். முதன்முதலில் 2018ல் வெளியான காலம் என்ற ஷார்ட் பிலிமில் நடித்தார். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த குறும்படத்தில் வினிதாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து வரம், போன்ற ஏராளமான ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்தார். ட்ரிபில்ஸ் படத்தில் வாணி போஜனின் தோழியாக நடித்தார். இதன் மூலம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தமிழ் சின்னத்திரையில் முதல் அறிமுகம் சன்டிவியின் மகராசி சீரியல்தான். அதில் வான்மதி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே ரீச் ஆனார். இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பு சித்தி2 சீரியலில் நடித்தார். பல சீரியல்கள் ஷார்ட் பிலிம்கள் நடித்தாலும் வினிதாவிற்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை தான். அதில் வினிதா என்ற கேரக்டரில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். அர்ஜூனின் சொத்தை அபகரிக்க நினைக்கும் வில்லியாக நடிப்பில் ஸ்கோர் செய்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் நடிகை வைஷாலி தனிகாவின் நெருங்கிய தோழியும் கூட.

இனியாவுக்கு மியூசிக், ட்ராவலிங் ரொம்பவே பிடித்தமான ஒன்று. நடிக்க வருவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் ரொம்பவே பிரபலமானவர். இவரின் இன்ஸ்டா பேஜஸ் முழுவதும் ஸ்டைலான போட்டோஷூட் புகைப்படங்கள்தான். ஷுட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டிஸ், இன்ஸ்டா ரீல்ஸ் என ஆக்டிவாக இருக்கிறார். இவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை லைக் செய்ய தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பெரியத்திரையில் சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் இனியா..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Zeetamil serial gokulathil seethai vinitha jaganathan biography

Next Story
18- 20 வயதிலும் ஹார்ட் அட்டாக்: என்ன காரணம்?Tips to prevent heart attack tamil: ways to prevent a heart attack in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express