scorecardresearch

5 மொழிகளில் ஃபேமஸ் நடிகை… கோலங்கள் முதல் நீதானே எந்தன் பொன்வசந்தம் வரை… நடிகை சத்யப்பிரியா ப்ரொஃபைல்!

சிவாஜி கணேசன் தொடங்கி கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

sathiya priya

ஜீ தமிழின் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலில் சூர்ய பிரகாஷின் அம்மாவாக நடித்து கலக்கி வருகிறார் நடிகை சத்யப்பிரியா. ஆந்திராவை சேர்ந்தவர். விஜயநகரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சிறு வயதிலேயே முறைப்படி நாட்டியம் கற்றுள்ளார். 1000த்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். கல்லூரி படித்தபோது டிராமாக்களில் நடித்து மாநில அளவில் பல பரிசுகளை வென்றுள்ளார். முதன் முதலில் 1974ல் பாலக் துருவ் என்ற ஹிந்தி படத்தில் வில்லியாக அறிமுகமானார். பிறகு மலையாள படங்களில் நடித்து வந்தார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு வரை இவரது பெயர் சத்யவதி தான்.

சத்யபிரியாவாக தமிழில் முதல் அறிமுகம் 1975ல் வெளியான ‘மஞ்சள் முகமே வா’ திரைப்படம் தான். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து படங்களில் தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளது. இவள் ஒரு சீதை, முதல் இரவு, மாம்பழத்து வண்டுகள், தீபம் படத்தில் சிவாஜியுடன் வில்லி கேரக்டர் என பல படங்களில் நடித்தார். கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் சக்ராயுதம் இவரது முதல் படம். குறுகிய காலத்திலேயே 50 திரைப்படங்கள் நடித்தார். பிறகு 1979 ஆண்டு கன்னட தயாரிப்பாளர் முகுந்தன் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதன்பிறகு நடிப்பிலிருந்து சிறிதுகாலம் விலகியவர் நீண்ட இடைவெளிக்கு பின் பார்த்திபனின் புதிய பாதை படம் மூலம் ரீ என்ட்ரி ஆனார். அந்த படத்தில் வில்லியாக நடித்திருந்தது தமிழ் ரசிகர்களிடையே நல்ல ரீச் ஆனது. தொடர்ந்து பணக்காரன், பாட்டாளி மகன், எதிர்காற்று, சின்ன கவுண்டர், ரோஜா, அரண்மனை காவலன், பாஷா படத்தில் ரஜினியின் அம்மாவாக, ராஜாவின் பார்வையிலே, மாமன் மகள், சூர்யவம்சம் படத்தில் தேவையானி அம்மா, நேசம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், நீ வருவாய் என, படையப்பா படத்தில் ரம்யாகிருஷ்ணன் அம்மாவாக, ஆசையில் ஒர் கடிதம், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், உன்னை நினைத்து, தற்போது வணங்காமுடி என பல படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசன் தொடங்கி கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் சினிமாவில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் 50 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார். சின்னத்திரையில் இவரது முதல் என்ட்ரி டிடி பொதிகையில் ‘பகல் கனவுதான்’. பிறகு சன்டிவியில் கோலங்கள் சீரியலில் நடித்து சின்னத்திரையில் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து கலைஞர் டிவியில் சூர்யா, பாரதி, நம்ம குடும்பம், விஜய்டிவியில் ரோஜா கூட்டம், சன்டிவியில் இதயம், வம்சம், ஜெயாடிவியில் சீரியல்களில் நடித்தார்.

கல்யாண பரிசு, ரன், மகாலட்சுமி போன்ற சீரியல்களிலும் ரீசன்ட்டாக நடித்தார். தற்போது ஜீ தமிழின் நீதானே எந்தன் பொன்வசந்தம் தொடரில் சூர்ய பிரகாஷின் அம்மா ஷாரதாவாக நடித்து வருகிறார். மலையாளம் தவிர்த்து மற்ற மொழிகளில் சொந்த குரலில் தான் பேசி நடித்துள்ளார். இவர் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றி உள்ளார். எந்த வேலையாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடுடன் செய்வது சத்யபிரியாவின் இயல்பு.. சினிமா, சீரியல்கள் என பிசியாக இருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Zeetamil serial neethane enthan ponvasantham actress sathyapriya

Best of Express