சத்யா சீரியலில் ரவுடி பேபியின் பாசமான மாமியாராக நடித்து வருபவர் யுவஸ்ரீ. வெள்ளித்திரை, சின்னத்திரை என மீடியாவுக்குள் 25 வருடங்களாக பயணித்து வருகிறார். டிராமா ஆர்டிஸ்ட்டாக வாழ்க்கையை தொடங்கியவர் வெள்ளித்திரையில் சில படங்கள் நடித்தார். ஓய்ஜி மகேந்திரனின் நாடக குழுவில் ஏராளமான நாடகங்களில் நடித்தார். அதன்பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். 18 வயதில் வெள்ளித்திரையில் அறிமுகமானவர். முதன்முதலில் சிவக்குமார் நடிப்பில் 1990ல் வெளியான மறுபக்கம் படத்தில் நடித்தார். பிரபு நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சின்னத்தம்பி படத்தில் இவர் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.
Advertisment
தொடர்ந்து சிந்து நதி பூ, வண்டிச்சோலை சின்னராசு, கோட்டை வாசல், தாய்மொழி, மூன்றாவது கண்,முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். காவலன் படத்தில் நடிகர் விஜய்யின் அம்மாவாக நடித்திருந்தார். பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் சாதிக்க முடியாததை சின்னத்திரையில் சாதிக்கலாம் என சின்னத்திரைக்குள் நுழைந்துள்ளார்.
Advertisment
Advertisements
தூர்தர்ஷினில் வெளிவந்த நரகாசுரன் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார். சன்டிவியில் கே பாலச்சந்தரின் ரகுவம்சம் சீரியலில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து அலைகள், வாழ்ந்து காட்டுகிறேன், சாந்தி நிலையம், லட்சியம், வசூல் சக்ரவர்த்தி, எங்க வீட்டு பெண், செல்லமே, விதி, பொன்மகள் வந்தாள்,ஈரமான ரோஜா போன்ற ஏராளமான சீரியல்களில் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சத்யா சீரியலில் அமும்பேபியின் அம்மாவாக, சத்யாவின் அன்பான மாமியாராக நடித்து கலக்கி வருகிறார். ஜீ தமிழின் சிறந்த மாமியாருக்கான விருதையும் வென்றுள்ளார்.
ஆரம்பத்தில் குடும்ப சூழல் மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்தால் சீரியல், நாடகம் என பிசியாக நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளார். ஆனால் சரியான வரன் அமையாததால் திருமணம் செய்துகொள்ளவில்லை. நிறைய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துள்ளார். எந்த புராஜெக்ட்ல கமிட் ஆனாலும் உடனே அந்த கேரக்டருக்கு ஏத்த மாதிரி இருபது சேலை வாங்கிவிடுவாராம். கதாபாத்திரத்துக்கு மேட்சா போடுற காஸ்டியூம் இருக்கணும் என நினைப்பவர். பெரிய நடிகர்களின் படங்களில் அம்மா கேரக்டர் கிடைத்தால் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் யுவஸ்ரீ.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil