மலையாள ஹீரோயின்.. தமிழ் சீரியல் மாடர்ன் மாமியார்… திருமதி ஹிட்லர் ஹாசினி பயோகிராபி!

சன்டிவியில் ஒளிபரப்பான கங்கா சீரியல் மூலம் தான் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார் கீர்த்தனா பொதுவால்.

keerthana podhuval

ஜீ தமிழின் சூப்பர் ஹிட் சீரியல் திருமதி ஹிட்லர். வழக்கமான சீரியல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த தொடரின் நாயகியாக நடித்து வருபவர் ஹாசினி. இவரது பெயர் கீர்த்தனா பொதுவால். கர்நாடகாவில் பிறந்த இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கேரளாவில் முடித்துள்ளார். நடிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் மாடலிங் செய்து வந்தார். பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். முதன்முதலில் மலையாள திரையுலகில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 2014ஆம் ஆண்டு வெளியான வெள்ளக்குப்பாயம் என்ற படத்தில் நடித்தார்.

தொடர்ந்து அஞ்சு மஞ்சு காதல் கதை, மதுர ஸ்வப்னா, ருத்ரா ஐபிஎஸ் போன்ற பல படங்களில் நடித்தார். மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் சில படங்கள் நடித்தவர் தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தார். சன்டிவியில் ஒளிபரப்பான கங்கா சீரியலில் அறிமுகமானார். இந்த தொடர் மூலம் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். அதன்பிறகு ஜீ தமிழின் திருமதி ஹிட்லர் தொடரில் நடிக்க தொடங்கினார். ஜாலியாக துருதுருவென இருக்கும் ஹாசினி தனக்கு முற்றிலும் நேர்மாறாக உள்ள ஏஜே வை திருமணம் செய்து கொள்கிறார். தன்னைவிட அதிக வயதுள்ள மருமகள்கள் மூவருக்கு மாமியாராக நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து நகைச்சுவையான பல சுவாரஸ்யங்களுடன் கதை செல்கிறது. இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிகை அம்பிகா நடித்து வருகிறார்.

இந்தி மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பான சீரியலின் ரீமேக் தான் திருமதி ஹிட்லர். ஹாசினி கேரக்டருக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ஃபேன்ஸ்.ஹீரோயின் சொல்லிதான் கூப்பிட்டு வந்தாங்க, மற்ற மொழிகளில் ஹிட் ஆன சீரியல் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறும் கீர்த்தனா தற்போது அந்த சீரியலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் மகிழ்ச்சியில் உள்ளார்.சமூக வலைதளங்களில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள், டப்ஸ்மேஷ், போட்டோ ஷூட் செய்து பதிவிடுவது என ஆக்டிவாக உள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட பேன்ஸ் பேஜஸ் உள்ளது. ஒரே சீரியலில் நிறைய பேன்ஸ் ஆர்மி என ஜாலியாக இருக்கிறார் கீர்த்தனா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Zeetamil serial thirumathi hitler hasini keerthana podhuval biography

Next Story
இதுவரை 8000 கணக்குகளை பிளாக் செய்திருக்கிறேன் – உடல் கேலி பற்றி பாக்கியலட்சுமி நேஹா மேனன்Baakiyalakshmi Nehah Menon about Body shaming Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com