ஆன்கர் டூ சீரியல் வில்லி… செம்பருத்தி நந்தினியின் லைஃப் ட்ராவல்…

tamil serila news: பல சீரியல்களில் வில்லியாக நடித்து வரும் மௌனிகா ஹீரோயிசத்தை அதிகம் விரும்புவாராம்,

சின்னத்திரையின் பல முன்னணி சீரியல்களில் வில்லியாக நடித்து வருபவர் மௌனிகா. சென்னையை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் ஆன்கராக இருந்துள்ளார். அதன்பிறகு மாடலிங் செய்து பல விளம்பரங்களில் நடித்தார். சின்னத்திரையில் 2012 ஆம் ஆண்டு லக்ஷிமி கல்யாணம் சீரியலில் முதன் முதலாக அறிமுகமானார்.

அதன்பிறகு சன்டிவி, விஜய்டிவி பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். வள்ளி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், வம்சம், தேவதை, தலையணை பூக்கள், தென்பாண்டி சிங்கம், சின்ன தம்பி, அழகு போன்ற சீரியல்களில் நடித்தார். பெரும்பாலும் இவர் நெகட்டிவ் கேரக்டரை தேர்ந்தெடுத்து நடிப்பார்.

சின்னத்திரையில் மௌனிகாவிற்கு திருப்புமுனையாக அமைந்தது செம்பருத்தி சீரியல்தான். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் பயங்கர வில்லத்தனமாக நடித்திருப்பார். ஆதிக்கடவூர் குடும்பத்தை பழிவாங்கும் கதையில் நடித்து வருகிறார். இவரது ஸ்டைலான துணிச்சலான நடிப்புக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது ரெட்டை ரோஜா, சன்டிவியின் புது என்ட்ரியாக வானத்தைப்போல சீரியலிலும் நடித்து வருகிறார். இதிலும் வில்லி கேரக்டர் தான். பாசிட்டிவ் கேரக்டரை விட நெகட்டிவ் தான் நல்ல ரீச் கிடைக்கும் என்கிறார். இவரின் கெத்தான நடிப்பை பார்த்து ரசிர்கள் நீங்கள் எப்போதும் பேன்ட் ஷர்ட் போடுங்க என்கிறார்களாம். மௌனிகா பெரியத்திரையிலும் நடித்துள்ளார். விஷால், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான உயிரே சீரியலில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் பேஜஸ்தான். இவர் வீட்டில் பயங்கர ஸ்டிரிக்டாம். அதையும் தாண்டி நடிப்புக்கு இவரது வீட்டில் அப்பா சர்போர்ட். ஹீரோயிசத்தை அதிகம் விரும்புவாராம்.நிறைய நெகட்டிவ் ரோல் பன்ன மௌனிகாவுக்கு பாசிட்டிவ் ரோலில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது ஆசையாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Zeetamil suntv sembaruthi fame nandhini vjmounika biography

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express