ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை என்ற தொடரில் நடித்து வருபவர் இனியா. இவரது நிஜப்பெயர் வினிதா ஜெகநாதன். தமிழகத்தின் வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர். ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் படிப்பை முடித்தவர் நேபாலில் உள்ள மனிபால் காலேஜ் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் என்ற தனியார் கல்லூரியில் மெடிக்கல் சயின்ஸ் படித்துள்ளார். பிறகு அதே கல்லூரியில் சில மாதங்கள் வேலை பார்த்து வந்தவர் நடிப்பு மீதான ஆர்வத்தில் மாடலிங் துறையில் என்ட்ரி ஆனார். பல விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு மேக் அப் ஆர்டிஸ்ட்டும் கூட.
Advertisment
வினிதா ஆரம்பத்தில் குறும்படங்கள் மூலம் அறிமுகமானார். முதன்முதலில் 2018ல் வெளியான காலம் என்ற ஷார்ட் பிலிமில் நடித்தார். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த குறும்படத்தில் வினிதாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து வரம், போன்ற ஏராளமான ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்தார். ட்ரிபில்ஸ் படத்தில் வாணி போஜனின் தோழியாக நடித்தார். இதன் மூலம் தமிழ் சின்னத்திரையில் முதல் அறிமுகம் சன்டிவியின் மகராசி சீரியல்தான். அதில் வான்மதி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே ரீச் ஆனார். இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பால் சித்தி2 சீரியலில் நடித்தார்.
Advertisment
Advertisements
பல சீரியல்கள் ஷார்ட் பிலிம்கள் நடித்தாலும் வினிதாவிற்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை தான். அதில் நெகட்டிவ் ரோலில் அர்ஜூனின் சொத்தை அபகரிக்க நினைக்கும் இனியாவாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் நடிகை வைஷாலி தனிகாவின் நெருங்கிய தோழியும் கூட. இனியாவுக்கு மியூசிக், ட்ராவலிங் ரொம்பவே பிடித்தமான ஒன்று. நடிக்க வருவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் ரொம்பவே பிரபலமானவர்.
இவரது இன்ஸ்டா பேஜஸ் முழுவதும் ஸ்டைலான போட்டோஷூட் புகைப் படங்கள்தான். இவர் பதிவிடும் வீடியோக்கள் போட்டோக்களை லைக் செய்ய தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பெரியத்திரையில் சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் இனியா..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil