Tamil serial news: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம ஹிட்டாக சென்றுகொண்டிருக்கும் சீரியல் தான் திருமதி ஹிட்லர். வழக்கமான சீரியல் தொடர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு அழுகை ஃபேமிலி செண்டிமெண்ட் என போர் அடிக்காமல் நேயர்களை மகிழ்விக்கவும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதத்திலும் உள்ளது. இந்த தொடரில் ஹாசினி என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தனா பொதுவால்லும், ஏஜே என்ற கேரக்டரில் அபிநவ் ஜனார்த்தனமும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் சின்ன பெண்ணான ஹாசினி, சற்றே வயதான ஹீரோவை திருமணம் செய்து கொள்ளும் வகையில் கதை இருக்கும். துறுதுறுப்பான அழகிய இளம் பெண்ணான ஹாசினியை சுற்றி நிகழும் சுவாரஸ்யமான குதூகலமிக்க நிகழ்வுகளை சொல்லும் தொடர் தான் திருமதி ஹிட்லர். இந்த தொடர் ஆரம்பித்த சில மாதங்களிலேயே கீர்த்தனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இவர் திரைத்துறையில் இருந்து சின்னத்திரைக்கு வந்துள்ளார். பல கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.
Advertisment
கீர்த்தனா கர்நாடகாவில் பிறந்து கேரளாவில் வளர்ந்தவர். கேரளாவில் தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். மாடலிங்கில் இருந்தபோது அவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான மலையாள படமான "வேலக்குப்பாயம்" படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு "அஞ்சு மஞ்சு காதல் கதை" படத்தில் நடித்தார். தொடர்ந்து மதுர ஸ்வப்னா மற்றும் ருத்ரா ஐபிஎஸ் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். கீர்த்தனாவுக்கு பிடித்த நடிகர் விஜய் சூர்யா தான். இவருடைய பேவரேட் நடிகை கத்ரினா கைப் தானாம்.
Advertisment
Advertisements
தமிழில் முதன்முதலில் சன்டிவியில் ஒளிபரப்பான கங்கா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.அதன் பிறகு அவருக்கு ஜீ தமிழில் திருமதி ஹிட்லர் சீரியலில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜாலியாக துருதுருவென இருக்கும் ஹாசினி தனக்கு முற்றிலும் நேர்மாறாக உள்ள ஏஜே வை திருமணம் செய்து கொள்கிறார். தன்னைவிட அதிக வயதுள்ள மருமகள்கள் மூவருக்கு மாமியாராக நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து நகைச்சுவையான பல சுவாரஸ்யங்களுடன் கதை செல்கிறது. இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிகை அம்பிகா நடித்து வருகிறார்.இந்தி மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பான சீரியலின் ரீமேக் தான் திருமதி ஹிட்லர்.
ஹீரோயின் சொல்லிதான் கூப்பிட்டு வந்தாங்க, மற்ற மொழிகளில் ஹிட் ஆன சீரியல் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறும் கீர்த்தனா தற்போது அந்த சீரியலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் மகிழ்ச்சியில் உள்ளார்.சமூக வலைதளங்களில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள், டப்ஸ்மேஷ், போட்டோ ஷூட் செய்து பதிவிடுவது என ஆக்டிவாக உள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட பேன்ஸ் பேஜஸ் உள்ளது. ஒரே சீரியலில் நிறைய பேன்ஸ் ஆர்மி என ஜாலியாக இருக்கிறார் கீர்த்தனா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“