Advertisment

நகங்களில் வெள்ளை திட்டுகள்.. கவனம், இந்த குறைபாடு இருக்கலாம்.. மருத்துவர் விளக்கம்

உங்கள் நகங்களில் வெள்ளை புள்ளிகள் அல்லது கோடுகள் உள்ளதா, பொதுவாக அவை கால்சியம் குறைபாட்டின் அறிகுறியாக அடிக்கடி நம்பப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Brittle nails (medicalnewstoday)

உங்கள் நகங்களில் வெள்ளை புள்ளிகள் அல்லது கோடுகள் உள்ளதா, பொதுவாக அவை கால்சியம் குறைபாட்டின் அறிகுறியாக அடிக்கடி நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் இது ஒரு கட்டுக்கதை. உங்கள் நகத்தில் உள்ள அந்த வெள்ளைப் புள்ளிகள் கால்சியம் குறைபாட்டால் அல்ல, மாறாக ஜிங்க் குறைபாட்டால் ஏற்படுகின்றன.

Advertisment

ஜிங்க், நம் உடலுக்குத் தேவையான ஒரு “மைக்ரோ ட்ரேஸ் மினரல்” என்று ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா பகிர்ந்து கொண்டார் – குறிப்பாக இதயம், எலும்புகள், நுரையீரல் மற்றும் நூற்றுக்கணக்கான பிற நொதிகள் - ஆனால் உடலால் அதை சேமிக்க முடியாது என்பதுதான் அதைவிட முக்கியமானது.  இது நாம் ஜிங்க் நிறைந்த உணவை உட்கொள்வது மிகவும் இன்றியமையாததாக ஆக்குகிறது.

துத்தநாகம் நமது உடலில் இரும்புக்கு அடுத்தபடியாக மிகுதியாக உள்ள இரண்டாவது கனிமமாகும், மேலும் இது புரத உற்பத்தி, உயிரணு வளர்ச்சி, டிஎன்ஏ தொகுப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை பராமரித்தல் மற்றும் என்சைம் எதிர்வினைகள் போன்ற பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது.

'மிராக்கிள் மினரல்' என்றும் அழைக்கப்படும், ஜிங்க் நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளை மாற்றுவதற்கு உதவி செய்கிறது, அதாவது ஒரே இரவில் அறிகுறிகளை மேம்படுத்துகிறது, என்று மகிஜா கூறினார்

ஜிங்க்-இன் சில உணவு ஆதாரங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், துத்தநாகம் (கிட்டத்தட்ட 70 சதவிகிதம்) புரதமான அல்புமினுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது என்று தெரிவித்தார். ஆனால், 73 சதவீத இந்தியர்கள் புரதச் சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதால், ஜிங்க் குறைபாடு இன்னும் அதிகமாக உள்ளது, என்று அவர் மேலும் கூறினார்.

ஜிங்க் குறைபாட்டின் அறிகுறிகள்

ஜிங்க் குறைபாட்டைக் கண்டறிவது கடினமானது, ஏனெனில் நமது உயிரணுக்களில் ஜிங்க், சுவடு அளவில் விநியோகிக்கப்படுகிறது, இது நம்பகமான ரத்த பரிசோதனை முடிவைக் கொடுக்க கடினமாக உள்ளது. இருப்பினும், மகிஜா, ஜிங்க் குறைபாட்டைக் கண்டறிய உதவும் அறிகுறிகளைப் பட்டியலிடுகிறார்:

* நீங்கள் நீண்ட நேரம் தூங்குவதில்லை

*பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு

*குறைந்த பாலுணர்வு அல்லது மனநிலை

*எளிதில் எடை அதிகரிக்கும்

*உங்கள் பற்கள் சிதைந்து ஈறுகளில் இரத்தம் வரும்

*விவரிக்க முடியாத கை மற்றும் முக சுருக்கங்கள்

*அடிக்கடி எரிச்சல், கோபம்

*குணமடைவதில் தாமதம்

*துரிதமான மாகுலர் சிதைவை

ஜிங்க் நிறைந்த உணவுகள்

ஜிங்க் நிறைந்த இயற்கை உணவுப் பொருட்கள்:

சிப்பி (Oyster)

நண்டு மற்றும் இறால்

இறைச்சி மற்றும் கோழி

காளான், கீரை, ப்ரோக்கோலி, பூண்டு

கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் போன்ற பருப்பு வகைகள்

மொச்சை, பைன், சியா, மற்றும் பூசணி போன்ற நட்ஸ் மற்றும் விதைகள்

பழுப்பு அரிசி, ஓட்ஸ் மற்றும் குயினோவா போன்ற முழு தானியங்கள்

கார்ன்ஃப்ளேக்ஸ், மியூஸ்லி, கோதுமை ஃப்ளேக்ஸ் போன்ற வலுவூட்டப்பட்ட காலை உணவு தானியங்கள்

பால் உணவுகள்

கருப்பு சாக்லேட்

ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ்

ஜிங்க் குறைபாட்டைப் போக்க ஒருவருடைய உணவில், ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ் சேர்க்கலாம். ஜிங்க் குளுக்கோனேட், ஜிங்க் சல்பேட், ஜிங்க் சிட்ரேட் போன்ற பல்வேறு ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ் சந்தையில் கிடைக்கின்றன, மேலும் அவை மருத்துவரின் ஆலோசனையின் பின்னரே எடுக்கப்பட வேண்டும். இருப்பினும், நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ் சிலருக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பாதகமான பக்க விளைவுகளுடன் தொடர்புடையவை, என்று டாக்டர் நேஹா பதானியா கூறினார்.

மனதில் கொள்ள வேண்டியவை

அதிக ஜிங்க் உட்கொள்வது தாமிரம் மற்றும் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதில் தலையிடலாம் மற்றும் சிலருக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும். பெரியவர்களில் ஒரு நாளைக்கு 40 மில்லிகிராம் ஜிங்க் தாண்டுவது காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் சோர்வு போன்ற காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

மேலும், சில ஆன்டிபயாடிக்ஸ் உறிஞ்சுவதில் ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ் குறுக்கிடுவதாகக் காட்டப்பட்டுள்ளது, ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளும் போது அவற்றின் செயல்திறன் குறைகிறது, என்று டாக்டர் பதானியா மேலும் கூறினார்.

பக்கவிளைவுகளின் அபாயத்தைக் குறைக்க, பரிந்துரைக்கப்பட்ட அளவைக் கடைப்பிடிக்கவும், மருத்துவ மேற்பார்வையின் கீழ் இல்லாவிட்டால், ஒரு நாளைக்கு 40 மி.கி. மேல் வரம்பை மீறுவதைத் தவிர்க்கவும், என்று அவர் வலியுறுத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment