வைரமுத்துவுக்கு ஓ.என்.வி குருப் விருது வழங்க எதிர்ப்பு; மறுபரிசீலனை செய்ய நடுவர் குழு முடிவு

பிரபல திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான நடுவர் குழுவுக்கு எதிரான விமர்சனத்திற்கு நடிகர் பார்வதி தலைமை வகித்தார். அவர் வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொள்ளவில்லை என்று விமர்சித்துள்ளார்.

public outrage, jury re-examine onv kurup literary award, மீ டூ குற்றச்சாட்டு, கவிஞர் வைரமுத்து, அடூர் கோபாலகிருஷ்ணன், அஞ்சலி மேனன், பார்வதி, டி எம் கிருஷ்ணா, ஓ என் வி குருப் விருது, நடுவர் குழு மறுபரிசீலனை, metoo accused poet vairamuthu, adoor gopalakrishnan, anjali menon, parvathy, tm krishna, onv kurup award, onv kurup award

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி குருப் இலக்கிய விருது அறிவிக்கப்பட்டதற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, ஓ.என்.வி. கலாச்சார அகாடமி வைரமுத்துவுக்கு விருது வழங்குவம் முடிவை மறுபரிசீலனை செய்கிறது. இது குறித்து ஓ.என்.வி அகாடமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “விருதுக் குழுவின் வேண்டுகோளின்படி, ஓ.என்.வி. கலாச்சார அகாடமி ஓ.என்.வி. இலக்கிய விருதை மறுபரிசீலனைக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

கவிஞர் வைரமுத்துவுக்கு 5வது ஓ..என்.வி குருப் இலக்கிய விருது அறிவிக்கப்பட்டது தொடர்பாக மலையாள திரைப்படத் துறை பிரபலங்கள் அகாடமி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் எழுந்த #MeToo இயக்கத்தின்போது, கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களால் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

பிரபல திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான நடுவர் குழுவுக்கு எதிரான விமர்சனத்திற்கு நடிகர் பார்வதி தலைமை வகித்தார். ஓ.என்.வி. இலக்கிய விருதுக்கு கவிஞர் வைரமுத்துவை தேர்வு செய்வதற்கு முன்னர் அவர் வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொள்ளவில்லை. வைரமுத்துவின் பாலியல் துன்புறுத்தல் நடத்தையால் பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் குறைத்து மதிப்பிட்டதாக நடுவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

“கலை மற்றும் கலைஞன் என்ற விவாதத்துடன் நீங்கள் என்னிடம் வந்தால், கலையை உருவாக்கும் நபரின் மனிதநேயத்தை மட்டுமே நான் பார்க்கத் தேர்வுசெய்வேன் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். குற்றத்துக்கு முழுமையான தண்டனையில்லாமல் வாழ்பவர்களின் கலை இல்லாமல் என்னால் வாழ முடியும்” என்று நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு நடுவர் குழுவை விமர்சித்து இருந்தார்.

இந்த எதிர்ப்பில் திரைப்பட இயக்குனர் அஞ்சலி மேனனும் இணைந்தார். “ஓ.என்.வி-யின் பெயர் எந்த மலையாளிக்கும் ஆழ்ந்த நுண்ணுணர்வு, கண்ணியம் மற்றும் மரியாதையை அளிக்கிறது. ஆகவே, ஓ.என்.வி அகாடமி ஓ.என்.வி விருதுக்காக 17 பெண்களால் குற்றம் சட்டப்பட்ட ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளது என்பதை அறிந்து மிகவும் கலக்கம் அடைந்தேன். அவர்கள் கொண்டாடும் விழுமியங்கள் இதுதானா? ” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, நடுவர் குழுவின் அறிதலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர், “இப்படித்தான் நம் சமூகம் பல பெண்களால் பாலியல் துன்புறுத்தல் செய்பவர் என்று அழைக்கப்படுபவருக்கு அதிக வலிமை அளிக்கிறது. இது முற்றிலும் வெட்கக்கேடானது! ” என்று ட்வீட் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: After public outrage the jury re examine onv kurup literary award for metoo accused poet vairamuthu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express