Advertisment

விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்

அம்புலிமாமா சங்கராக நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு நன்கு பரீட்சையமானவர் இந்த சங்கர்.

author-image
WebDesk
New Update
Ambuli mama artist KC Shiva Sankaran Passed away

Ambuli mama artist KC Shiva Sankaran Passed away : விக்கிரமாதித்தன் தன்னுடைய தோளில் வேதாளத்தை போட்டுக் கொண்டு நம்மையெல்லாம் திரும்பி பார்க்கும் “வேதாளம் சொல்லும் கதையை” யார் தான் மறந்திருப்பார்கள். ஓவியர் கே.சி. சிவசங்கரன் என்பதற்கு பதிலாக அம்புலிமாமா சங்கராக நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு நன்கு பரீட்சையமானவர் இந்த சங்கர்.

Advertisment

வயது மூப்பின் காரணமாக இன்று அவர் மரணம் அடைந்துள்ள்ளார். ஆரம்ப காலம் முதல் ஓவியத்தின் மீது அவருக்கு இருந்த தீராத காதல் அவரின் திறமையை உலகறிய செய்தது என்று தான் சொல்ல வேண்டும். அழகாக எழுதும் அவரை பள்ளி ஆசிரியர்கள் ஆரம்பத்தில் கரும்பலகையில் எழுத கூறுவார்களாம். புத்தகங்களில் இருக்கும் படங்களை அச்சு பிசுகாமல் அப்படியே வரைவதில் வல்லவராக இருந்த அவரை அடையாளம் கண்ட ஓவிய ஆசிரியர் ஞாயிற்றுக் கிழமை அவருக்கு தனியாக வகுப்புகள் எடுப்பதுண்டு.

உயர்நிலைப் படிப்பை முடித்தவுடன் அந்த ஆசிரியரின் பேச்சுக்கிணங்க ஆர்ட்ஸ் ஸ்கூலில் படித்தார் சங்கர். கலை மகள் குழுவில் ரூ. 150 மாத சம்பளத்திற்கு பணியாற்ற அவருக்கு அம்புலிமாமாவில் மிக சரியான வாய்ப்புகள் கிடைத்தது. ரூ. 350 என்ற பெரிய தொகையை மனதில் வைத்துக் கொண்டு, திறமைக்கு கிடைத்த வாய்ப்பிற்காக வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார் கலைமகள் முதலாளி.

சங்கருக்கு விக்கிரமாத்தின் - வேதாளம் கதைகளுக்கு வரைந்தது மூலம் தான் புகழ் என்றாலும் கூட, அவருக்கு முன்பே சித்ரா என்பவர் அக்கதைகளுக்கு ஓவியம் வரைந்து கொடுத்தார். பின்பு ராமகிருஹ்ண விஜயம் இதழுக்கும் வரைய துவங்கினார் கே.சி. சிவசங்கரன். இன்று மதியம் அவர் 01:30 மணி அளவில் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment