6 எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருது – பபாசி அறிவிப்பு

எழுத்தாளர் இராசேந்திர சோழன், கவிஞர் அபி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ் நவீன நாடக இயக்குனர் வெளி ரங்கராஜன் ஆகியோருக்கு கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Bapasi announced Muthamizharinjar Dr kalaignar porkizhi award, Muthamizharinjar Dr kalaignar porkizhi awards to writers, எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருது, எஸ் ராமகிருஷ்ணன், இராசேந்திர சோழன், கவிஞர் அபி, வெளி ரங்கராஜன், பபாசி அறிவிப்பு, Bapasi, S Ramakrishnan, Rajendra Cholan, poet Abi, Veli Rangarajan, tamil literature, kalaignar award to writers

எழுத்தாளர்கள் இராசேந்திர சோழன், எஸ்.ராமகிருஷ்ணன், உள்ளிட்ட 6 தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பபாசி அறிவித்துள்ளது.

கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளை அறிவித்து பபாசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2007-ல் 30ஆவது சென்னை புத்தகக் காட்சியை துவக்கிவைத்த, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும் ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்கள்.

அதற்காக பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவிலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த 2 பேருக்கும் ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் பணமும் அளித்துக் கவுரவித்து வருகிறது. அதன்படி 2007ல் இருந்து இதுவரை 84 எழுத்தாளர்களுக்கு 84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான விருதாளர்களை அதற்காக அமைக்கப்பெற்ற குழு தேர்வு செய்துள்ளது. தேர்வுபெற்ற விருதாளர்கள் பட்டியலை பபாசியின் தலைவர் ஆர்.எஸ் சண்முகம் அவர்கள் அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுவிட்ட 2020ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவும் 2021ஆம் ஆண்டுக்கான விழாவுடன் இணைந்து நடைபெறும். விழா குறித்த தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பபாசி தலைவர் அறிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு விருது பெறும் எழுத்தாளர்கள்:

  1. அபி – கவிதை
  2. இராசேந்திர சோழன் – புனைவிலக்கியம்
  3. எஸ்.ராமகிருஷ்ணன் – உரைநடை
  4. வெளி ரங்கராஜன் – நாடகம்
  5. மருதநாயகம் – ஆங்கிலம்
  6. நதித் சாகியா – பிற இந்திய மொழி(காஷ்மீரி)

தமிழில் எழுதும் எழுத்தாளர் இராசேந்திர சோழன், கவிஞர் அபி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ் நவீன நாடக இயக்குனர் வெளி ரங்கராஜன் ஆகியோருக்கு கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கிலத்தில் எழுதும் மருதநாயகம், பிற இந்திய மொழிகளில் காஷ்மீரி மொழியில் நதித் சாகியாவுக்கு கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bapasi announced muthamizharinjar dr kalaignar porkizhi award for writers

Next Story
10 தமிழ் அறிஞர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது – தமிழக அரசு அறிவிப்புTamil Nadu govt announced classical tamil award, kalaignar m karunanidhi classical tamil award, kalaignar m karunanidhi classical tamil award for tamil scholars, tamil nadu govt, 10 தமிழ் அறிஞர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, தமிழக அரசு அறிவிப்பு, classical tamil award, tamil nadu govt, tamil news, tamil nadu news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com