Booker Prize 2020 Winner Douglas Stuart's Shuggie Bain : 2020-ம் ஆண்டின் புக்கர் பரிசு, டக்ளஸ் ஸ்டூவர்ட் எழுதிய ஷக்கி பெயின் புத்தகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 1980-களில் கிளாஸ்கோ (Glasgow) நகரத் தொழிலாள வர்க்கத்தின் உருக்கமான உருவப்படத்தை ஸ்டூவர்ட் தனது முதல் படைப்பில் பதித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகம், பிழைப்புக்காக ஓர் குடும்பம் எதிர்கொள்ளும் போராட்டம் மற்றும் அந்தப் போராட்டங்களுக்கிடையில் சோர்ந்துபோன பெற்றோர்களை நேசிக்கும் குழந்தைகள் பற்றியது.
இது தவிர இந்த பட்டியலில், அவ்னி தோஷியின் 'பர்ன்ட் சுகர்' புத்தகம் (இந்தியாவில் 'கேர்ள் இன் ஒயிட் காட்டன்' என்ற தலைப்பில் வெளியானது), டயேன் குக் எழுதிய 'புதிய வனப்பகுதி (The New Wilderness)', சிட்ஸி டங்கரெம்பாவின் 'This Mournable Body ', மாஸா மெங்கிஸ்டே எழுதிய 'The Shadow King' மற்றும் பிராண்டன் டெய்லரின் ரியல் லைஃப் ஆகிய ஐந்து புத்தகங்களும் போட்டியில் இருந்தன.
இந்த ஆண்டும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் முன்னாள் புக்கர் பரிசு வென்ற கசுவோ இஷிகுரோ, மார்கரெட் அட்வுட் மற்றும் பெர்னார்டின் எவரிஸ்டோ ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.
ஆசிரியர்கள் லீ சைல்ட், சமீர் ரஹீம், எழுத்தாளர் லெம்ன் சிஸ்ஸே மற்றும் மொழிபெயர்ப்பாளர் எமிலி வில்சன் ஆகியோர் நடுவர்களாக பணிபுரிந்தனர். இதற்கு ஆசிரியரும் இலக்கிய விமர்சகருமான மார்கரெட் பஸ்பி தலைமை தாங்கினார். "நடுவர்கள் என்ற முறையில் நாங்கள் 162 புத்தகங்களைப் படித்தோம். அவற்றில் பல புத்தகங்கள் முக்கியமான, சில சமயங்களில் அசாதாரணமான ஒத்த மற்றும் மதிப்புமிக்க செய்திகளை வெளிப்படுத்தியிருந்தன. சிறந்த நாவல்கள் பெரும்பாலும் உலகின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சங்கடங்களைப் பற்றிக் கூறுவது மட்டுமல்லாமல் நமது சமூகங்களை மதிக்கத்தக்க உரையாடல்களுக்கும் தயார்ப்படுத்துகின்றன. காலநிலை மாற்றம், மறந்துபோன சமூகங்கள், முதுமை, இனவாதம் அல்லது தேவைப்படும் புரட்சி போன்றவற்றை மட்டும் பேசாமல் அற்புதமானது மனதின் ஆழம், வாழ்க்கை, கற்பனை, சூழ்நிலை போன்றவற்றையும் காட்சிப்படுத்தும்.
ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட ஆறு பேரின் பட்டியல் எதிர்பாராத விதமாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிகவும் வித்தியாசமாக இருந்தாலும் கூட நம் அனைவரையும் எதிரொலிக்கின்றன. படைப்பாற்றல் மனிதக்குலத்தின் இந்த நாளேடுகளை உலகளாவிய பார்வையாளர்களுக்குப் பரப்ப உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று பஸ்பி கூறிய வார்த்தைகளை அவர்களின் இணையதளத்தில் மேற்கோள் காட்டப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"