கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Chennai Book Exhibition : சென்னையில் நடைபெறும் 44-வது புத்தக கண்காட்சிக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு கண்காட்சி நடைபெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

By: Updated: January 24, 2021, 10:16:55 PM

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில்  44-வது புத்தக கண்காட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நடத்திக்கொள்ள அனுமதி வழக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதுவரை 43 ஆண்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில், 44 வது ஆண்டு புத்தக கண்காட்சி வரும் பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுதுதல் காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பதிலாக பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளது.

இந்த புத்தக கண்காட்சி குறித்து தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னையில் இந்த ஆண்டு 44-வது புத்தக கண்காட்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது நூலக இயக்குநரின் கருத்தை கவனமுடன் பரிசீலனை செய்து அரசு இந்த அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டுதலின் படி இந்த புத்தக கண்காட்சி நடைபெறவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கண்காட்சியின் விதிமுறைகள் :

கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட வாசகர்களுகளுக்கு அனுமதி இல்லை. மேலும் டிக்கெட் கவுண்டரில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் டிக்கெட் விதிமுறையை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு அரங்கிலும் வாசகர்கள் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் தனித்தனி நுழைவு வாயில்கள், அமைக்க வேண்டும். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும்.

மேலும் கண்காட்சிக்கும் வரும் வாசகர்கள் அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட வேண்டும்.  குளிர்சாதன பெட்டி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரங்கத்தின் உள்ளே வரும் அனைவரும் முக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Literature News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Chennai 44 th exhibition tn government announced guidelines

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X