சர்வதேச மனித உரிமைகள் இயக்கத்தின் சி.எல்.ஆர் விருது தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவிப்பு
சி.எல்.ஆர் விருது எழுத்தாளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று அளிக்கப்படும் என்று விருது அளிப்பவர்கள் தெரிவித்ததாக எழுத்தாளர் அமிர்தம் சூர்யா தெரிவித்தார்.
சி.எல்.ஆர் விருது எழுத்தாளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று அளிக்கப்படும் என்று விருது அளிப்பவர்கள் தெரிவித்ததாக எழுத்தாளர் அமிர்தம் சூர்யா தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் இயக்கத்தின் இலக்கிய விருதான சி.எல்.ஆர் விருது எழுத்தாளர், சாரு நிவேதிதா, கவிஞர் அமிர்தம் சூர்யா உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் இந்துமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
சி.எல்.ஆர் விருது (CLR Award) என்பது கலாச்சாரம், இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி விருது என்பதன் சுருக்கம் ஆகும். இது சர்வதேச மனித உரிமைகள் இயக்கத்தால் நிறுவப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவைத் தளமாககொண்ட சர்வதேச மனித உரிமைகள் இயக்கம், பிலிப்பைன்ஸ் சர்வதேச மனித உரிமைகள் இயக்கம், இந்தோனேசியாவைத் தளமாகக் கொண்ட பல்சுவை பத்திரிகை, நைஜீரியாவைத் தளமாககொண்ட கவிதைக் கலை பள்ளி, துருக்கியைச் சேர்ந்த இலக்கிய சங்கம், ஐ.டி.ஒய்.எம் ஃபவுண்டேஷன், பச்சிடெர்ம் டேல்ஸ் ஆகியவற்றுடன் இனைந்து நிறுவப்பட்டது.
ஆரம்பத்தில் இந்த விருது வழங்கும் நிகழ்வு ஆங்கில இலக்கியம் மற்றும் ஆராய்ச்சியில் நடத்தப்பட்டது. ஆனால், பச்சிடெர்ம் டேல்ஸ் குழுவில் இணைந்தபோது நாங்கள் தமிழ் இலக்கியத்தை வலியுறுத்தினோம். விருந்து பெற்றா புத்தகங்கள் இந்த நாடுகளில் உள்ள நூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகளில் வைக்கப்படும். நம்முடைய சிறந்த தமிழ் நூல்களை முடிந்தவரை பல நாடுகளில் வைப்பதற்கானது இந்த முயற்சி. குழு உறுப்பினர்களால் குறும் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு, வாக்களிக்கும் முறை மூலம் விருது பெறும் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
சி.எல்.ஆர் விருது சிறந்த எக்ஸ்பிரிமெண்டல் எழுத்தாளர் விருது எழுத்தாளர் சாரு நிவேதாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஃபேண்டஸி எழுத்தாளர் விருது எழுத்தாளர் சீனிவாசன் நடராஜனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணிய எழுத்துகளுக்காக எழுத்தாளர் லதாவுக்கும் ரியலிஸ எழுத்தாளர் விருது கவிஞர் கலாபிரியாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரர் எழுத்துக்காக எழுத்தாளர் ஆர்னிகா நாசருக்கும் கவிதைக்கு கவிஞர் அமுதா பொற்கொடிக்கும் ரொமாண்டிக் எழுத்தாளராக கவிஞர் அமிர்தம் சூர்யாவுக்கும், சிறுவர் இலக்கியத்தில் எழுத்தாளர் ஜி.ஏ.பிரபாவுக்கும், ஜென்ர் பெண்டிங் எழுத்துக்காக எழுத்தாளர் எஸ்.பிதாமஸ்க்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பெண் எழுத்தாளர் விருது கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியனுக்கும் சிறந்த இளம் எழுத்தாளர் விருது நா.கோகிலனுக்கும் சிறந்த எல்.ஜி.பி.டி விருது ஸ்வேதா சுதாகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் இந்துமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் கால கட்டத்தில் சி.எல்.ஆர் விருது எழுத்தாளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று அளிக்கப்படும் என்று விருது அளிப்பவர்கள் தெரிவித்ததாக எழுத்தாளர் அமிர்தம் சூர்யா தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"